பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 29 பெட்டியில் வைத்துப் பூட்டு; உடனே புறப்பட வேண்டும்; வண்டிகள் தயாராக நிற்கும்' என்று கூறித் துரிதப்படுத்தினார். அதைக் கேட்ட அந்த யெளவனப்பெண் மிகுந்த குழப்பமும் கலவரமும் அடைந்து சிறிது நேரம் யோசனை செய்து, "இவ்வளவு தடபுடலாக நான்கூட ஏன் புறப்படவேண்டும்? நீங்கள் மாத்திரம் முன்னால் போய், நல்ல இடமாகப் பார்த்து இருந்து கொண்டு எனக்குச் செய்தியனுப்பினால், அதற்குள் நான் சகலமான ஏற்பாடுகளையும் செய்துவிட்டு, நமக்கு வேண்டிய எல்லாச் சாமான்களையும் எடுத்துக்கொண்டு சாவகாசமாக வருகிறேனே" என்று நயமாக மன்றாடிக் கூறினாள். அதைக் கேட்ட புருஷர், 'இல்லை இல்லை. அப்படிச் செய்வது யுக்தமான காரியமல்ல. நான் ஊரைவிட்டு ஓடி விட்டேன் என்பது நாளையதினம் காலையில் தெரிந்து போம். பின்னால் நீ புறப்படும்போது என்னிடத்திற்கு வரத்தான் நீ புறப்படுகிறாயென்று சந்தேகித்து நமது பகைவர்கள் உன்னோடு ரகசியமாகத் தொடர்ந்து வந்து, நானிருக்கும் இடத்தைக் கண்டு கொள்வார்கள். ஆகையால், நீயும் இப்போதே வந்துவிடுவதே நல்லது' என்று அழுத்தமாகவும் உறுதியாகவும் மேலும் அவள் ஆட்சேபித்துப் பேசாதபடியும் கூறி முடித்தார். அதற்குமேல் தான் படிவாதமாகப் பேசுவது சந்தேகத்திற்கு இடங்கொடுக்கு மென்று நினைத்த அந்த யெளவனப் பெண் தன் கணவனது விருப்பத்திற்கு மாறாக நடக்காத மகாபதிவிரதா சிரோன் மணி போல நடித்து மிகவும் பணிவாகவும் நிரம்பவும் அநுதாபப் படுகிறவள் போலவும் பேசத் தொடங்கி, 'அப்படி யானால் நானும் இப்போதே வந்துவிடுகிறேன். இதோ ஒரு நொடியில் என்னுடைய சாமான்களையெல்லாம் எடுத்துக் கொண்டு பிரயாணத்துக்குத் தயாராகிறேன்; நீங்கள் கீழேபோய் வேலைக்காரிகளுள் இரண்டு பேரை இங்கே அனுப்பிவிட்டு, உங்களுடைய சாமான்களையெல்லாம் கட்டச் சொல்லுங்கள். என்றுமிகவும் சிரத்தையாகப் பேசினாள்.அவளது புருஷர், 'நான்