பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 65 எப்பேர்ப்பட்ட அருமையான மனிதர் பஞ்சவர்ணக்கிளி வடிவெடுத்தாலும், நான் இந்த ஒரு கிளிக்கு மேல் அதிகமாக வைத்துக்கொள்ளப் போவதில்லை. என்னுடைய மனசிலுள்ள வாஞ்சை இந்த ஒரு கிளியினிடத்தில் வைப்பதற்கே போதுமானதாக இல்லையே. இன்னமும் பல கிளிகளை வைத்துக் கொண்டு நான் என்னசெய்கிறது? அத்தனைகிளிகளும் இது கொஞ்ச நேரத்துக்கு முன் செய்ததுபோலத் தப்பித்துக் கொண்டு ஓடுமானால், அத்தனை கிளிகளையும் பிடித்துக் கொடுக்க தங்களைப் போன்ற அத்தனை புண்ணியவான்களுக்கு நான் எங்கே போவேன்?’ என்று குதூகலமாகப் பேசினாள். அவளது புத்தி சாதுர்யத்தைக் கண்டு மிகுந்த களிப்பும் வியப்பும் கொண்ட அந்த யெளவன புருஷர், 'அடடா! என்னுடைய கருத்தை இன்னமும் நீ சரியானபடி உணர்ந்து கொள்ளாமல் பேசுகிறாய்! நீ இவ்வளவு பிரியமாக இருப்பதைக் கவனியாமல் இந்தக் கிளி இப்படி நன்றி கெட்டத்தனமாக ஒடுகிறதே. நான் இந்தக் கிளியாக இருந்தால் இப் படி ஓடாமல் பரஸ்பரம் உன்மேல் வாஞ்சைவைத்து எப்போதும் உன்னை சந்தோஷப்படுத்த முயன்றுகொண்டிருப்பேனே யென்று நான் சொல்லக் கருதினேன். அப்படியிருக்க நானும் இதைப்போல ஒடிப்போய் விடுவேனென்று நீ சொல்வதற்கே இடமில்லையே' என்றார். அதைக் கேட்டபூர்ணசந்திரோதயம் மறுபடியும் பேசத் தொடங்கி, 'தம் மிடத்தில் பிரியம் வைப்போரிடத்தில் தாமும் பரஸ்பரம் பிரியம் வைத்து நன்றி மறக்காமல் நடக்க வேண்டுமென்ற கொள்கை மனிதருடைய பகுத்தறிவுக்குத்தான் தெரியும். ஆகையால், தாங்கள் மனித வடிவத்தோடு இருக்கும் வரையில் தாங்கள் இப்படிச் சொல்லலாம். ஆனால் தாங்கள் கிளியாக மாறிவிட்டால், தங்களுக்குக் கிளியின் அறியாமையும், அக்ஞானமும் உண்டாகிவிடும். ஆதலால், தாங்களும் மற்ற கிளிகள் மாதிரியே நடந்து கொள்வீர்களன்றி வேறுவிதமாக நடக்கமுடியுமா? கிளியின் வடிவத்தோடிருந்து, மனிதருடைய பகுத்தறிவை ,5,-6