பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/178

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 169 மதித்து நான் மறுபடியும் அவளை அடைய முயற்சி செய்வது கண்ணியம் ஆகாது. ஆகையால், அவளை நான் இன்றோடு மறந்து விடுகிறேன். பார்சீ ஜாதிப் பெண் போல வேஷம் போட்டுக் கொண்டு வந்தவளான இந்த மாசிலா மணிப் பிள்ளையின் சம்சாரத்தை நான் அடைய முயற்சி செய்து பார்க்கிறேன். எப்போது இளவரசரிடத்தில் அவள் அவ்வளவு துணிந்து தாராளமாக நடந்தாளோ, அவள் சுத்தமான மனுவி யல்ல என்பது நிச்சயமாகிறது. பணத்தை வாரி இறைத்தால் அவளுடைய மனசை எப்படியும் கவர்ந்து விடலாம். அவளுடைய புருஷனும், அதற்குச்சம்மதிக்கக்கூடியவனாகவே தோன்றுகிறான். ஆகையால், நான் உடனே இதற்குத் தக்க மனுஷியை அனுப்பி, அவளைச் சரிப்படுத்தி அழைத்துக் கொண்டு வரச்செய்கிறேன். இந்த விஷயத்தில் மகா திறமை வாய்ந்தவளான நம்முடைய ஹேமாபாயியை உடனே வரவழைத்தால் அவள் எப்படிப்பட்ட பெண்ணையும் ஒரு நிமிஷத்தில் சொக்குப்பொடி போட்டு மயக்கிக் கொண்டு வந்து விடுவாள். இந்தப் பெண்ணை வெல்வது அரிதல்ல" என்று தமக்குள் தீர்மானித்துக்கொண்டு உடனே விசையை அழுத்த, அடுத்த நிமிஷத்தில், அவரது காரியதரிசி அவருக்கு எதிரில் வந்து வணக்கமாக நின்றான். ஜெமீந்தார்.அவனைப் பார்த்து, 'நீ உடனே ராணி வாய்க்கால் சந்துக்குப் போய் நம்முடைய ஹேமாபாயியை அழைத்துக் கொண்டு வா!' என்று உத்தரவு செய்ய, கோவிந்தசாமி அப்படியே செய்வதாகச் சொல்லிவிட்டு அவ்விடத்தை விட்டு வெளியில் போய்விட்டான். 女 ★ ★ ஒரு மணிநேரம் கழிந்தது. கோவிந்தசாமி ஹேமாபாயியை அழைத்துக்கொண்டு வந்து சேர்ந்தான்.