பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/44

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


40 பூர்ணசந்திரோதயம்-2 'குழந்தாய் இந்த அபாய சமயத்தில்தானா நீ இப்படி வெளியில் போகும்படியானதொந்தரவு ஏற்படவேண்டும். அடாடா என்ன செய்கிறது! இன்று சாயுங்காலம் உன்னை வழிமறித்து உன் பொருள்களைப் பிடுங்கிக்கொண்ட அந்த முரட்டாள்கள் இதோ பக்கத்தில்தான் வந்து கூடி இருக்கிறார்கள். நான் பெரிய பண்ணைப் பிள்ளையின் வீட்டை நோக்கி நடந்தபோது, அவர்கள் என்னை மடக்கிக் கொண்டார்கள். நான் பெரிய பண்ணைப் பிள்ளையிடத்தில் போய் அவர்களின் மேல் கோள் சொன்னால் என்னை மண்வெட்டியால் ஒரே வெட்டாக வெட்டிப் புதைத்து விடுவதாகச் சொல்லி பயமுறுத்தியதன்றி என்னைப்பிடித்து வைத்துக் கொண்டு இவ்வளவு நேரம் உபத்திரவித்தார்கள். நான் கெஞ்சிக் கூத்தாடி அவர்களிடம் கேட்டுக்கொண்டு திரும்பிவர இந்நேரம் ஆயிற்று. இன்று ராத்திரி முழுதும் உன்னை இவ்விடத்திலேயே வைத்திருந்து, பொழுது விடிந்த உடனே உன்னை உன்னுடைய ஜாகையில் கொண்டுபோய்விட்டுவிடும்படிஅவர்கள் கண்டித்துச்சொல்லி என்னை அனுப்பியதன்றி, நான் பெரிய பண்ணைப் பிள்ளையினிடத்தில் இந்த விஷயத்தையே வெளியிடக் கூடாது என்று அவர்கள் என்னிடம் உறுதியாகச் சொல்லி பயமுறுத்தி என்னை அனுப்பினார்கள். நான் இங்கே வந்து கொஞ்ச நேரம் பொறுத்திருந்து, அவர்கள் எல்லோரும் போனவுடனே இருளில் ரகசியமாகப் புறப்பட்டுப் போய்ப் பெரிய பண்ணைப் பிள்ளையிடம் இந்தச் சங்கதியைத் தெரிவிக்க எண்ணி இங்கே வந்தேன். நான் சொன்னபடி செய்கிறேனா என்பதைப் பார்ப்பதற்காக அவர்கள் இன்னமும் பக்கத்திலே தான் இருப்பார்கள். நீ இப்போதுகுளத்தங்கரைக்குப் போனால், நான் உன்னை ரகசியமாகப் பெரிய பண்ணைப் பிள்ளையின் வீட்டுக்கு அனுப்பி இருக்கிறதாக நினைத்து, உன்னைப் பிடித்து மறுபடியும் உபத்திரவிப்பார்கள். ஆகையால், நீ இப்போது வெளியில் போவது உசிதமாகத் தோன்றவில்லை' என்றார்.