பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/64

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


60 பூர்ணசந்திரோதயம்-2 நேரமில்லை. இந்தச் சங்கதியை இந்த அம்மாளிடம் தெரிவி: என்று அன்பாக வற்புறுத்திக் கூறியவராய் விரைவாகப் பாய்ந்து வண்டியின் மேல் ஏறி உட்கார்ந்துகொண்டு எருதுகளை ஊக்க, அவைகள் அந்த வழியிலேயே திரும்பித் திருவாரூரை நோக்கி ஒடலாயின. தான் சொல்லும் மறுமொழியைக்கூடக் கேளாமல் அவ்வளவு அவசரமாய்ப் போகிற அந்தப் புருஷரைத் தான் தடுத்து நிற்கச் செய்வது தவறு என்று நினைத்த முத்தம்மாள், உடனேகதவை மூடிமறுபடியும் பூட்டிக்கொண்டு ஒட்டமாக நடந்து கட்டிடத்திற்குள் போய்ச் சேர்ந்தாள். அவளுக்கு முன்னால் உட்புறத்தில் சென்ற ஷண்முகவடிவின் மனதில் தனது அத்தை செளக்கியமாக இருக்கிறாளா என்பதைப் பார்க்க வேண்டும் என்ற நினைவே முதன்முதலாக எழுந்து துண்டியது. ஆகையால், அவள் தனது அத்தை படுத்திருந்த அறைக்குள் போய்ப் பார்க்க, அந்த அம்மாள் எவ்விதமான சலனமும் இன்றி அயர்ந்து நித்திரை செய்துகொண்டிருந்ததைக் கண்டாள். அப்போதே அவளது மனத்தின் பெருஞ் சுமையாகிய கவலையும் அச்சமும் நீங்கின. அவ்விடத்தில் தான் அதிகமாக நிற்காமல் வெளிப்பட்டுத் தன்னைக் காப்பாற்றிய பேருபகாரியான அந்த உத்தம புருஷருக்கு உபசார வார்த்தைகள்கூறி, அவருக்குத் தக்கபடி தன்னால் இயன்ற மரியாதைகள் செய்து அனுப்ப வேண்டும் என்ற எண்ணங் கொண்டவளாய் நமது பெண்ணரசி தனது அத்தையின் அறைக்கு வெளியில் வந்த முத்தம்மாளைக் கண்டு, 'அந்த ஐயாவைக் கூடத்திற்கு அழைத்துக் கொண்டுபோய் விசிப் பலகையில் உட்காரச் செய் தாகத்துக்குக் கொடுத்து சரியானபடி உபசாரம் செய் என்று கூற, அதைக் கேட்ட முத்தம்மாள், 'இல்லை அம்மா அந்த ஐயா உள்ளேயே வரவில்லை. ஏதோ அவசர ஜோலியாக அவர்கள் பொன்னிரைக்குப் போனார்களாம். வழியில் நீங்கள் அபாயத்தில் அகப்பட்டுக் கொண்டிருந்ததைக் கண்டு உங்களை இங்கே அழைத்துக்கொண்டு வந்து விட்டார்களாம். மறுபடியும் அவசரமாக அந்த ஊருக்கே போக