பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் i 1 9 லீலாவதி, "சரி; சந்தோஷம். நீங்கள் என் விஷயத்தில் அந்த ரங்கமான விசுவாசம் உள்ளவர்கள் என்பது எனக்குத் தெரியும். ஆகையால், இந்தக் காரியத்தை நீங்கள் செய்வீர்கள் என்று நிச்சயமாக நம்பியே நான் இங்கே வந்தேன். வேறொன்றும் இல்லை. இதோ ஒரு கடிதம் இருக்கிறது. நீ இதை எடுத்துக் கொண்டு தோட்டத்தின் பின்புறத்தில் இருக்கும் வாசலைத் திறந்து கொண்டு வெளியில் போய் ஒரே ஒட்டமாக தஞ்சாவூருக்குப் போக வேண்டும். போய்விட்டுப் பொழுது விடிவதற்குள்திரும்பி இங்கே வந்துவிடவேண்டும். என்புருஷர் காலையில் எழுந்து வெளியில் வரும்போது நீ வழக்கப்படி தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருக்க வேண்டும். நீ தஞ்சாவூருக்குப் போய்விட்டு வந்தாய் என்று அவர் கொஞ்சமும் சந்தேகிக்கவே இடமிருக்கக் கூடாது' என்றாள். தோட்டக்காரன், 'இப்போது மணி எவ்வளவு இருக்கலாம்?' என்றான். வீலாவதி, 'இப்போது தான் கடிகாரம் மூன்று மணி அடித்தது' என்றாள். தோட்டக்காரன், 'சரி; நல்லதாயிற்று. பொழுது விடிவ தற்குள் நான் இரண்டு தரம் தஞ்சாவூருக்குப் போய்விட்டு வரலாம். கடிதத்தைத் தஞ்சாவூரில் யாரிடத்தில் கொடுக்க வேண்டும்?' என்றான். - லீலாவதி, "உனக்குப் போலீஸ் கமிஷனருடைய கச்சேரி இருக்கும் இடம் தெரியும் அல்லவா. அந்தக் கச்சேரிக்குப்போ. அதன் வாசலில் ஒரு தபாற்பெட்டி தொங்கிக் கொண்டிருக்கும்; அந்தப் பெட்டிக்குள் இந்தக் கடிதத்தைப் போட்டுவிட்டு நேராக வந்துவிடு. அவ்வளவுதான்காரியம்! அங்கே ஒருவேளைதபால் பெட்டி இல்லாவிட்டால், வாசற் கதவின் இடுக்கின் வழியாக உள்ளே சொருகிவிட்டு வந்துவிடு' என்றாள்.