பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் - 12了 எண்ணிக்கொண்டாலும், அவர்ஏதோரகசியமான காரணத்தைக் கருதி அந்த மனிதனை யாரும் பார்க்காதபடி மறைத்து வைத்திருக்க, தான் கூச்சலிட்டு வேலைக்காரரும், அண்டை வீட்டாரும் கூட்டம் கூடும்படி செய்தால், தனது புருஷருக்குப் பரம சங்கடமான நிலைமை உண்டாவதன்றி, அதுபற்றி அவர் தன்னையும் கொடுமையாக தண்டிப்பார் என்ற பயம் உண்டாகி அவளது தொண்டையை அடைத்துவிட்டது. ஆகவே, அவள் மேலே நடக்காமல் திரும்பிப் படுதாவண்டை போய் நின்று முன்போல அதற்குள் மறைந்துகொண்டு இடுக்கினால் வெளியில் பார்த்தவண்ணம் இருந்தாள். சற்றுமுன் தான் சொல் விவிட்டு வந்ததற்கு இணங்க, தோட்டக்கார அங்காளம் மாள் அந்த அபாயகரமான சமயத்தில் அவ் விடத்திற்கு வந்துவிடப் போகிறாளே என்ற அச்சமும் கவலையும் இன்னொரு பக்கத்தில் தோன்றி அவளை வதைத்தன. அவள் அஸ்வாறுதத்தளித்து அடங்கி ஒடுங்கிமிகுந்த ஆவலோடு நின்றாள். சமையலறையில் காணப்பட்ட பிரகாசம் திடீரென்று மறைந்துபோயிற்று. சில விநாடி நேரத்தில் அந்த முரட்டு மனிதன் சமையலறையை விட்டுக் கூடத்தை நோக்கி வந்து படுதாவைக்கட்ந்துமெத்தைப்படியைநோக்கி நடந்தான். அந்தச் சமயத்தில் தான் மூச்சுவிட்டால்கூட, அவன் அந்த ஒசையிலிருந்து யாரோ ஒளிந்திருப்பதாகச் சந்தேகித்து, படுதாவை நகர்த்திப்பார்த்துத் தான் இருந்ததைக் கண்டு வேறே யாரோ வென்று நினைத்துக் கூக்குரலிட்டுத் தாறுமாறான நிலைமையை உண்டாக்கிவிடப் போகிறானே என்ற பீதியினால் தூண்டப் பட்டவளாய் லீலாவதி தனது மூச்சை நன்றாக ஒடுக்கி அசைவற்று நின்று கொண்டிருந்தாள். இரண்டொரு விநாடி நேரத்தில் அந்த மனிதன் மெத்தைப் படிக்கட்டை அடைந்து, அதன்மேல் ஏறத்தொடங்கி, முன்வந்ததுபோலவே சந்தடியின்றி மெல்ல மெல்ல அடிவைத்துப் படிகளைக் கடந்து மேலே போக ஆரம்பித்தான். அதைக் கண்ட லீலாவதி தான் நினைத்ததுபோல அந்த மனிதனையே தனது புருஷர் அண்ணாசாமி நாய்க்கன் 9.3.III-9