பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 பூர்ணசந்திரோதயம்-3 எல்லாக் காரியமும் நடந்துபோகும் என்ற ஒர் உறுதி அவளது மனதில் உண்டாகிக்கொண்டே இருந்தது. ஆனாலும் இன்னதென்று விவரிக்கமுடியாத ஒருவித திகிலும் நடுக்கமும் உண்டாகி அவளது குற்றமுள்ள மனதை வதைத்தவண்ணம் அதிகப்பட்டுக் கொண்டே இருந்தன. பகல் பதினோரு மணி சமயமாயிற்று. அது மாசிலாமணிப்பிள்ளை ஸ்நானத்திற்கு எழுந்திருக்கும் நேரமாதலால், லீலாவதி தனது போலி அலுவல்களை அவ்வளவோடு நிறுத்திவிட்டு அவர் இருந்த இடத்திற்கு வந்து சேர்ந்தாள். அவளைக் கண்ட மாசிலாமணிப் பிள்ளை தாம் படித்ததை அவ்வளவோடு நிறுத்திவிட்டு அவளிடத்தில் வாஞ்சையாகவும் அன்பாகவும் லோகாபிராம மாகவும் பேசத் தொடங்கினார். தாம் அவளிடத்தில் சமாதானமாகவே நடந்து கொள்ளவேண்டும் என்று அவர் உறுதி செய்து கொண்டிருந்தார் என்பது நன்றாகத் தெரிந்தது. இருந்தாலும், அவள் தான் எடுத்துக்கொண்ட ரகசிய நடவடிக்கைகளைப் பற்றி விசனப் படவே இல்லை. தன் புருஷரது குணாதிசயங்களை நினைக்க நினைக்க தான் அவரிடத்தில் வாழ்ந்த வாழ்க்கையை நினைக்க நினைக்க, எப்படியாவது தான் அவரது கொடுங் கோன்மையிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு தப் பிப் போய் விட வேண்டுமென்ற தீர்மானமே முன்னிலும் அதிகமாக ஊர்ஜிதப்பட்டது. அந்தத் தீர்மானத்தினால் அவளது மனம் நிரம்பவும் துணிவும் உரமும் பெற்று, தான் எடுத்துக் கொண்ட நடவடிக்கையிலிருந்து எப்படிப்பட்ட பயங்கரமான சம்பவம் நிகழ்ந்தாலும், தான் அதற்குப்பின்வாங்காமல் மகாதிறமையாக நடந்துகொள்ள வேண்டும் என்ற பிடிவாதமும் ஏற்பட்டுப் போனது. ஆகையால், அவள்நானமும், பணிவும், பயபக்தியும், வாஞ்சையும் வடிவெடுத்து வந்த உத்தம பத்தினிபோல அவருக்கு அருகில் வந்து நின்று, தான் தூக்கு மேடைக்கு அனுப்பத் தீர்மானித்திருக்கும் அந்த மனிதரோடு நிரம்பவும் இங்கிதமாகவும் ஸரஸ்மாகவும் மனோரம் மிய மாகவும் சம்பாஷித்துக் கொண்டிருந்தாள்.