பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 213 கொண்டே இருந்தது. ஆனால், தான் அப்படி செய்தால் அதனால், தனக்கு ஏதேனும் துன்பம் நேருமோ என்ற நினைவினால் அவள்தனது ஜீவகாருண்யச் சிந்தையை ஒருவாறு அடக்கிக்கொண்டு வெளியில் நடந்தாள். அந்த நடு இரவில் நிர்மாதுஷ்யமாக இருக்கும் அந்தப் பட்டணத்திற்குள் தான் தனிமையில் எந்த இடத்திற்குப் போகிறது என்ற சிந்தனையே அவளது மனதில் அப்போது உண்டாகவில்லை. பொழுது விடிகிற வரையில் அந்த மாளிகைக்குள் எங்கேயாவது ஒளிந்திருந்து பகற்பொழுதில் வெளியில் போவது நல்லது எனத்தோன்றியது அன்றி, அப்போது பக்கங்களில் விசாரித்து அந்த மாளிகை யாருடையது என்பதையும் கிழவருடைய வரலாறுகளையும் உள்ளபடி உணர்ந்து கொள்ளலாம் என்ற எண்ணம் உண்டானது. ஆனாலும் பரமசண்டாளர்கள் வசிக்கும் இடமான அந்த மாளிகையில் தான் ஒரு rணம் கூட இருப்பது தவறு என்றும், தான் அந்த அகால வேளையில் வெளியில் போவதனால் தனக்கு எப்படிப்பட்ட பெருந்துன்பம் நேருவதானாலும் அதைத் தான் அனுபவிக்கலாம் என்றும், அவளது மனதில் உறுதியான ஒருவிதத் தீர்மானம் ஏற்பட்டது. ஆதலால் அவள் மிதமிஞ்சிய துணிவும் சுறுசுறுப்பும் கொண்டவளாய் நடந்து முன் பக்கத்து வாசலை அடைந்தாள்.

அவ்விடத்தில் கதவு மூடி உட்புறத்தில்தாளிடப்பட்டிருந்தது. ஒரு மூலையிலிருந்த மேடைமீது உட்கார்ந்திருந்த பாராக்காரன் அப்படியே சாய்ந்து கடுமையான துயிலில் ஆழ்ந்திருந்தான். ஆதலால் நமது இளந்தோகையான ஷண்முகவடிவு ஒசை செய்யாமல் நடந்து கதவண்டை சென்று தாழ்ப்பாளை மெதுவாக விலக்கி கதவைச் சிறிதளவு திறந்து கொண்டு வெளியில் போய் வீதியை அடைந்தாள். உள்ளே இருந்த திருடன் தனது உத்தேசத்தை நிறைவேற்றிக் கொண்டு மாளிகையை விட்டு வெளியில் வந்தாலும் வரலாம் என்ற எண்ணமும், தான் வந்ததைக்கண்ட பாராக்காரர் யாராகிலும் விழித்துத் தன்னைத்