பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 215 மையால், மங்கலான வெளிச்சம் எங்கும் வியாபித்திருந்தது. அந்த இளநங்கை வடக்கு ராஜவீதியின் கிழக்குக் கோடியை அடைந்து அதன் முடக்கில் திரும்பி கிழக்கு ராஜவீதிக்குள் புகுந்தாள். புகவே அவளுக்கு முன்னால் சுமார் நூறுகஜ தாரத்திற்கு அப்பாலிருந்த ஒரு சந்திற்குள் ‘பாரா. உஷார், செளபோரா. உஷார்’ என்று போலீஸ்காரர்கள் உரத்த குரலில் கத்திய ஓசை உண்டாயிற்று. அதைக்கேட்ட உடனே அந்த மின்னாளினது தேகம் கிடுகிடென்று நடுங்கியது. அவர்கள் தன்னைப் பிடித்துக்கொண்டு, தன் வரலாற்றைக்கேட்டால், அந்த அர்த்த ராத்திரியில் தான் வெளிப்பட்டு ஓடி வருவதைப் பற்றி என்ன முகாந்திரம் சொல்லுவதென்ற கவலையினால் அவளது தேகம் குன்றியது. கிழவரது மாளிகையில் தான் போய் மாட்டிக் கொண்டதையும், அவ்விடத்தில் தனக்கு நேரிட்ட துன்பங்களையும் வாயில் வைத்துச் சொல்ல, அவளுக்கு முற்றிலும் அசங்கியமாக இருந்தது. அதுவுமன்றித் தான் தனது வரலாற்றைப் போலீசாரிடம் சொன்னால் அவர்கள் உடனே தன்னை அழைத்துக் கொண்டு திரும்பவும் அந்த மாளிகைக்குப் போக நேர்ந்தாலும் நேரலாம் என்றும், அதன் சம்பந்தமாகத் தான் ஒருவேளை மறுநாள்கச்சேரிக்குப் போக நேர்ந்தாலும் நேரலாம் என்றும் நினைத்தாள். ஆகையால், தனது வரலாறு எதையும் அவர்களிடம் வெளியிடுவது உசிதமல்லவென்றும், தான் எப்படியாவது அவர்களது கண்ணில் படாமல் ஒடி ஒளிந்து கொள்ள வேண்டுமென்றும் அவள் தீர்மானித்துக் கொண்டாள். இன்னோர் எண்ணமும் அவளது மனத்தில் எழுந்து வதைத்தது. போலீசாரும் பரமதுஷ்டர்கள் ஆதலால், யெளவனப் பருவத்தி னளான தான் அகாலத்தில் தனிமையில் வந்திருப்பதைக் கண்டு தான் துன்மார்க்கத்தில் பிரவேசிக்கக் கூடிய ஸ்திரீயென்று நினைத்துத் தன்மீது துராசைகொண்டு தன்னை வருத்தினாலும் வருத்தலாமென்றும், அப்படி நேர்ந்தால், தனது நிலைமை விலங்கைவிட்டுத் தொழுவில் மாட்டிக் கொண்டவரது நிலைமை போலாகும் என்று அவள் நினைத்தவளாய்,