பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 பூர்ணசந்திரோதயம் - 5 ஏகபுத்திரனான நீலமேகனுடைய தாயுமான பங்கஜவல் லி இறந்துபோய் இப்போது சுமார் பதினான்கு வருஷகாலமாகிறது. ஆனாலும், அவள் உண்மையில் என்ன காரணத்தினால் அகால மரணமடைந்தாள் என்ற ரகசியம் இதுவரையில் எவருக்கும் தெரிந்திருக்காது என்பது நிச்சயம். அவள் சகலமான நற்குணங்களும் வாய்ந்த பரமசாது என்று ஜனங்கள் இன்னமும் எண்ணி அவளது மரணத்தைக் குறித்து விசனப்படுகிறார்கள் என்று நான் பலதடவைகளில் கேள்வியுற்றிருக்கிறேன். ஆனால் ஒரு விஷயம் மாத்திரம் நிச்சயம்; அவளுடைய அழகுக்குச் சமமாகச் சொல்லக் கூடிய பெண் சிருஷ்டி இந்த பூலோகத்தி லேயே இருக்காது என்று மாத்திரம் நான் நம்பிக்கையாகச் சொல்ல முடியும். அவள் என்னைக் கலியாணம் செய்து கொண்டு, என்னிடம் வந்து சுமார் ஒன்பது வருஷ காலம் வாழ்ந்திருக்கிறாள். அந்த ஒன்பது வருஷ காலத்திலும், அவள் ஒரே மாதிரியான வாஞ்சையும் பிரேமையும் உடையவளாய், சகலமான நற்குணங்களும் நிறைந்தவளாய், அவளைக்கண்ட எல்லோரும், அவள் மகா உத்தமியென்று புகழ்ந்து கொண்டாடும்படி பரிசுத்தமான நடத்தை உடையவளாய், மிருது பாஷிணியாய் இருந்துவந்தாள். அவளும் நானும் இரண்டுடலும் ஒருயிரும் போல மனமொத்து, துன்பமே கலவாத பரமானந்த சுகம் அனுபவித்து வந்தோம் என்பதும் உண்மையே. அவள் என்னிடம் வந்ததற்கு மறு வருஷத்தில் நீலமேகன் பிறந்தான். அப்படி அவள் வந்தவுடனே முதன்முதலாக ஆண்குழந்தையை ஈன்றதைக் கண்டு நான் அளவற்ற ஆனந்தமும் குதுகலமும் அடைந்ததன்றி, அவளிடத்தில் முன்னிலும் பதினாயிரமடங்கு அதிகரித்த பிரேமையும் பற்றும் உடையவனானேன். அதன் பிறகு நாலைந்து வருஷகாலம் வரையில் அவளுக்கு வேறு குழந்தை உண்டாகவில்லை. நீலமேகனைப் பெற்றபின் இரண்டொரு வருஷகாலத்தில், அவள் மறுபடியும் முன் போலவே கட்டழகும், யெளவனத்தின் ஜ்வலிப்பும் உடைய வளாய் மாறியதன்றி, குழந்தையே பெறாத பக்குவகாலப் பெண்