பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/323

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கள் 3 # 9 “ஐயோ! என் கண்ணே நான் இல்லாத காலத்தில் உனக்கு என்னென்ன துன்பங்கள் நேர்ந்திருக்கின்றன. ஆகா அதை வாயால் கேட்கும்போதே எனக்கு நடுக்கம் உண்டாகிறதே. உன் நிலைமையில் நான் இருந்தால், என்கதி என்ன ஆகியிருக்குமோ தெரியவில்லையே! நான் முதன் முதலில் இந்த ஊருக்கு வந்தபோது சோமசுந்தரம் பிள்ளையைக் காணாமல் தவித்த சந்தர்ப்பத்தில் என்னிடமிருந்த பணப்பையை முடிச்சு மாறிகள் அபகரித்துக்கொண்டு போனதைக் காண, என் மனம் எவ்வளவு தவிப்புத் தவித்தது தெரியுமா? ஐயோ! நம்மிடம் ஒரு காசு கூட இல்லையே என்றும், நீங்கள் திருவாரூரில் நிராதரவாக இருக்கிறீர்களே என்று நினைத்து நான் அடைந்த கலக்கமும் கிலியும் கொஞ்சமானவை அல்ல. அதனால், என் மனசில் ஏற்பட்ட ஒரு கவலையில் நான் என் மனவுறுதியையும் பொறுமையையும் இழந்து, இந்த அம்மணிபாயியின் சொற்படி நடந்து தகாத வழியைப் பின்பற்றவும் இணங்கினேன். நீயோ எப்படிப்பட்ட மகா பயங்கரமான விபத்திலும் மனத்தளர் வடையாமல் உறுதியாகவே இருந்து கடைசிவரையில் பரிசுத்தமான வழியிலேயே நடந்து வந்திருக்கிறாய். கடவுள் உன்னுடைய யோக்கியதைக்குத் தகுந்தபடி உன்னைக் காப்பாற்றுவதற்கு நல்ல உத்தம புருஷர்களான கலியான கந்தரம் பிள்ளையையும் ரகூடிாமிர்தம் ஜெமீந்தாரையும் கொண்டு வந்துவிட்டு உன்னைக் காப்பாற்றியிருக்கிறார். என்னைத் துன் மார்க்கர்களுக்கிடையில் மாட்டிவிட்டு, நான் அவர்களுடைய மோசவலையிலிருந்து மீளமாட்டாமல் செய்துவிட்டார். ஆனாலும், நான் இந்த ஊர் இளவரசரை மணந்து பட்டமகிஷி ஆகவேண்டுமென்று ஆசைப்பட்டதைத் தவிர, மனோவாக்கு காயமாகிய திரிகரண சுத்தியாகிய யாதொரு தீங்கையும் செய்யாமல், என்னைக் காப்பாற்றிக் கொண்டேன். அந்த ஒரு யோக்கியதை மாத்திரம் இல்லாதிருந்தால், நான் மறுபடி உன் முகத்திலேயே விழித்திருக்க மாட்டேன்’ என்று கூறி தான் திருவாரூரை விட்டுத் தஞ்சைக்கு வந்தது முதல் 2 /..