பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூர்ணசந்திரோதயம்

4ம் பாகம் தொடர்ச்சி.

அவ்வாறு கூறிக்கொண்டே போனவள், “ஐயோ! உங்கள் தகப்பனாரைத் தெய்வமென்றுதான் கொண்டாட வேண்டுமே அன்றி, மனிதரென்று எண்ணுவதற்கே இல்லை. அவர் உங்களுடைய தகப்பனார்; நீங்கள் அவருடைய குமாரர் என்ற முறையில் நீங்கள் அவர் செய்த காரியத்தைப் பற்றி தோஷம் கற்பித்துப் பேசக்கூடாது. அவர் வெந்நீர் அண்டாவிற்குள் இருந்தபோது, என்னுடைய புருஷர் அவர் இருந்ததைப் பார்த்துவிடப் போகிறாரே என்று நான் மூடமதியினால் பெட்டியை வைத்து அண்டாவின் வாயை மூடினேனே, அப்போது அவர் மூச்சுத் திணறித் திக் குமுக்காடி மரண அவஸ்தைப் பட்டுக் கொண்டிருந்திருக்கலாமே! அப்படி இருக்கையில் வேறே யாராக இருந்தாலும், வேறே எதையும் கவனிக்காமல் தம்முடைய உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஆவல் கொண்டு மேலே இருந்த பெட்டியைத் தள்ளிவிட்டு வெளியில் வந்திருப்பார்கள் அல்லவா! இவர் அப்படிச் செய்யாமல், என்மானம் போவதைவிடத் தம்முடைய பிராணன் போவதே தக்கதென்று நினைத்து மரண அவஸ்தையைப் பொறுத்துக்கொண்டு தம்முடைய உயிரையே விட்டுவிட்டாரே! அவருடைய பெருந்தன்மையையும் வீரத்தையும் நான் என்னவென்று சொல்லுவேன்! நீங்கள் அவருடைய வயிற்றில் உதித்தவர்கள். ஆகையால், அப்படிப்பட்ட சுத்த வீரத்தனம் உங்களிடமும் இல்லாமல் போகாது. ஆகையால், அவருடைய அரிய செய்கையைப் பற்றி நீங்கள் அவரைப் புகழ்ந்து. மெச்சுவீர்கள் என்றே நினைக்கிறேன் என்றாள். அவள் சொல்லிய வரலாற்றைக் கேட்டு வந்த நீலமேகம் பிள்ளை கண்ணிர் வடித்தபடி துயரமே வடிவாக மெளனமாய்