பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 57 கொண்டால், தான் முன் ஜென்மத்தில் ஏதாவது தவறு செய்திருக்க வேண்டுமென்று தனக்குத்தானே அவன் யூகித்துக் கொள்ளவேண்டுமென்றால், அது எப்படி சாத்தியமாகும்? இந்த சிருஷ்டியில் எல்லாம் மூடு மந்திரமாக இருக்கிறதே ஒழிய, வெளிப்படையான நீதியென்பதே காணப்படவில்லையே. எல்லாவற்றையும் படைக்கும் வல்லமை வாய்ந்த கடவுள் எல்லோரும் ஒழுங்காக நடக்க வேண்டுமென்று கட்டளை இட்டிருக்கக் கூடாதா? அல்லது, மனிதன் பிறக்கும்போது முன் ஜென்மத்தில் தான் இன்னின்ன பாவபுண்ணியம் செய்தோம் என்ற ஞாபகமுடையவனாய்ப் பிறக்கக் கூடாதா? கடவுள் இந்த மனித கோடிகளை மேலே சொன்ன இரண்டு விதமாகப் படைத்திருந்தால் உலகத்தில் எவ்வளவு துன்பங்களும், துயரமும் குறைவுபட்டுப் போகும் தெரியுமா? ஆகையால், கடவுளிடத்திலும் குற்றமோ அல்லது சக்திக் குறைவோ இருக்கிறதென்பது நிச்சயமாகத் தெரிகிறது. அவனே அப்படி இருக்கையில், அவனால் படைக்கப்படும் அற்ப அறிவும் சொற்ப சக்தியுமுள்ள நாம் தவறு செய்யாமல் இருப்பதென்றால் அது சாத்தியமான விஷயமா? அப்படி நாம் தவறு செய்வதற்கு நம்மை இவ்வாறு படைத்த கடவுளே உத்தரவாதியாக இருக்க, அதற்காக அவன் நம்மைத் தண்டிப்பது நியாயமாகுமா? என்ன கடவுள்! என்ன உலகம்! என்ன நீதி எல்லாம் அக்கிரமம். எல்லாம் துன்பம். எல்லாம் துக்கம். இப்படிப்பட்ட பரம சங்கடமான உயிரைச் சுமந்திருப்பதைவிட, இறந்துபோவதே நிரம்பவும் சிலாக்கியமானது. எனக்கு இந்த யெளவன பருவத்தையும், இவ்வளவு சிரேஷ்டமான தேஜசையும் கொடுத்த கடவுள் இதனால் உண்டாகக் கூடிய சுகத்தையும் ஆனந்தத்தையும் கொடுக்க மறுத்துவிட்டால், இந்த யெளவனத்தையும் அழகையும் கொடுத்தது ஒரு பெருத்த தண்டனையே ஒழிய, இது ஒரு நன்மை செய்தது ஆகாது. இதைப் பற்றி நான் கடவுளுக்கு நன்றியறிதல் செலுத்துகிறதா, அல்லது அவனைத் தூற்றுகிறதா? என் புருஷன் சிறைச்சாலையில்