உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பூவையின் சிறுகதைகள்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை எஸ். ஆறுமுகம்

9

i

நாளைக்குத்தான் இப்படிக் கல்யாணம் பண்ணிக்கொள்ளாமல் இருக்கப் போவதாக உத்தேசம், கையில் ஒரு பச்சைக்குழந்தையை வைத்துக்கொண்டு? பெரிய பிள்ளைக்கு அதிகமாக நான் எதைச் சொல்ல

இருக்கிறது?

"அத்தை, நான் என்ன யோசிக்க இருக்கிறது? காஞ்சனா மாதிரி இனிமேல் இந்தப் பிறவியிலா எனக்கு ஒரு பெண் மனைவியாக வாய்க்கப்போகிறாள்? ஊஹாம். ஒருக்காலும் இருக்காது. ஏதோ விட்டகுறை, தொட்டகுறை என்பார்களே, அந்த மாதிரிதான் எங்கள் திருமணம் முன்னர் நடந்திருக்கவேண்டும். இல்லாவிட்டால்..."

டாக்டரின் பேச்சிற்குச் சோகம் சுருதி கூட்டிற்று.

"சுந்தரம், தேரடித்தெரு சோமுபிள்ளையின் சொந்தக்காரப் பெண்ணாம், பர்மாவிலிருந்து வந்திருக்கிறாள். முதன் முதலில் அவளைக் கண்டதும் அப்படியே திகைத்துவிட்டேன். அப்படியே உன் பெண்டாட்டி போல ஒரே அச்சு நல்ல பதவிசு. நீ 'ஊம் என்றால் போதும். காரியம் முடிந்த மாதிரிதான். மேலும், கைக்குழந்தைக்கு நல்ல ஆதரவாயிற்று. அதன் நன்மையை உத்தேத்தாகிலும் சம்மதம் கொடு, sgil fl-isT

இவ்விதம் முகாந்தரங்கள் பலவற்றை எடுத்துக்காட்டி, அதற்கு அத்தாட்சிபோல அப்பெண் போட்டோவையும் அவரிடம் நீட்டினாள்.

படத்தைப் பார்த்ததும் அப்படியே நின்றுவிட்டார் டாக்டர். ஏனென்றால். அதே பெண்தான் சில தினங்களுக்கு முன்பு அவரிடம் வைத்தியம் செய்து கொண்டயுவதி. தன்னையும் அறியாமல் அந்தப் பெண்மீது உண்டான அன்பின் காரணம் இப்பொழுதுான் அவருக்குப் புலப்பட்டது.

"அத்தை, இரண்டாம் தாரமாகக் கல்யாணம் செய்து கொள்ள இஷ்டமா என்று கேட்டீர்களா பெண்ணிடம்?"

"எல்லாம் கேட்டாய்விட்டது. இதன்மூலம் ஏழைக்குடும்பத் திற்கும் ரொம்பவும் ஒத்தாசை செய்ததுபோல் இருக்கும்"

"புதியவள் வந்துவிட்டால் அப்புறம் கண்ணம்மாவை நன்றாகப் பேணி வளர்ப்பாள்". இந்த ஒரே ஆசையுடன் மனத்தைச் சாந்தியுறச் செய்துகொண்டு அவர் தன் அத்தையிடம் விடைபெற்று வீடு வந்தடைந்ததும், அவரது நெஞ்சம் பிளந்துவிடும் போலாய்விட்டது.