செந்தட்டி மம்மே பாரே!
மூன்று முடிச்சுக்கள் விழுந்தன. வத்சலைக்கு ஏற்பட்ட மகிழ்வு இவ்வளவு அவ்வளவு அல்ல. எல்லாமே கனாப்போலவே தெரிந்தது. மங்கல நாண் அவளது விழி விரிப்பில் இழைந்தது. தனக்குத் தாலிபாக்கியம் அருளிய அலகிலா விளையாட்டுடையவனை நன்றி நெஞ்சுடன் தொழுதாள். மேனி புல்லரித்தது. நாதசுர முழக்கம் அவளுக்கு உணர்வையும் சுயநினைவையும் கொடுத்தது. தலையை உயர்த்த எத்தனம் செய்தாள். விழிகள் நாணம் பூண்டன. மூன்று முடிச்சுக்களை அருளிய சொக்கலிங்கத்தின் கடைவிழி நோக்கைச் சந்திக்க முடியாமல் திக்குமுக்காடினாள்.
மனப்பந்தல் மளமளப்பு மிஞ்சியது. 'வாங்க, வாங்க! என்ற வரவேற்பு மொழிகளும், "தம்பி அவங்க எல்லோரையும் உட்காரவை, பர்மா பாயை விரிச்சுப்போடு, ம். ரங்கூன் ஜமுக்காளத்தையும் உதறி விரியப்பா... இந்தா பார், மரவைத் தட்டிலே வெற்றிலை பாக்கை நிரப்பிக் கொண்டு வா" என்ற உபசாரக் குறிப்புகளும் மாப்பிள்ளையின் இதழ்க் கரையினின்றும் ஒதுங்கி ஒலித்த வண்ணம் இருந்தன.
"சரி, நேரமாயிற்று. கல்யாணபரிசு, வாழ்த்து எல்லாம் வந்து குவிந்து கிடக்கிறதே. எல்லாவற்றையும் பிரித்துக் கொடுத்துவிடலாமே!... அப்புறம், பந்திவைக்க ஆரம்பித்து விட்டால், ஒரு சோலியைச் சமாளிக்கவே நேரமும் பொழுதும் காணாது!" என்றார் ப்ெரியவர் ஒருவர். கழுத்தில் இருப்பிடம் அமைத்திருந்த 'ருத்திராட்சக் கெவுடு" அவரது விரல்களின் ஆணைக்கேற்ப அசைந்தது.
"ம், அய்யா சொல்றதும் சரியான யோசனைதான் சந்தனப் பேலாவை இடம் மாற்றிக்கொண்டிருந்த 'உக்கிராணப் பொறுப்பாளர் ஆமோதித்தார்.
பத்தில் காவணத்தின் மையத்தில் சேகரித்து வைக்கப்பட்டிருந்த பரிசில்களையும், கடிதங்களையும், வாழ்த்துப் பத்திரங்களையும்