உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பூவையின் சிறுகதைகள்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 பூவையின் சிறுகதைகள்

மறந்துவிடாதீர்கள்!...” என்று உணர்ச்சிப் பெருக்குடன் பேசினாள் அப்பெண்.

தன்னைக்காத்த தெய்வமென அவளை வாழ்த்திப் பிரிந்தான் சொக்கலிங்கம். அவள் இறுதியில் சொன்னது 'செந்தட்டிமம்மே பாரே' 'என்னை மறந்துவிடாதீர்'என்ற வாசகம். அவளைத் துறந்து பிரிவதென்பது சாத்தியமா?

"மாட்டிஞ்சி! நீ என் உயிர் காத்த தெய்வமல்லவா? உனக்குத்தானே முதன் முதலாக என்னுடைய திருமணப் பத்திரிகையை அனுப்பினேன்?... நீ திருமண வாழ்த்துக்கூட அனுப்பவில்லையோ? ஏன்'

'அம்மான்' என்று கூப்பிட்டாள் வத்சலை, கையில் பால்தம்ளர் வைத்திருந்தாள். கண்களில் கனவுகளைச் சுமந்திருந்தாள். மது மலரின் எழிலுக்கு வருணனையோ வக்கணையோ தேவையா, என்ன?

-

முதல் இரவு.

ஆத்திரம் பூக்கவில்லை; ஆதங்கம் குரல் கொடுத்தது: "அம்மான், அன்றைக்கே உங்ககிட்டே கேட்கணும்னு நினைச்சேன். எப்போ பார்த்தாலும் நீங்க ஏன் பிரமை தட்டிப்போய் இருக்கிறீங்க?... உங்க கண் ரெண்டும் சதா கலங்கிப் போகுதே, ஏன் அம்மான்?...."

மெய்மறந்த பரவசம் எய்தினான் சொக்கலிங்கம். மோகப் பெருமயக்கம் அடைந்த பாவனையில் அவளை ஏறிட்டுப் பார்த்தான். கண்ணாமூச்சி ஆட்டத்திற்குத் துணைவர வத்சலையைக் கைதட்டி அழைக்கும் அழகைப் பார்த்தீர்களா?

"வத்சலை, என்னைப் பார்க்கிறபோது உனக்கு என்ன தோணும்?

"நீங்க என் தெய்வம் என்கிற ஞாபகம்தான்!"

"அப்படியானா, என்னையே ஒரு ஜீவன் காப்பாத்திச்சுன்னா, அந்த உயிரைப்பற்றி நீ என்ன நினைப்பே?

"தெய்வத்தைக் காத்த தெய்வம்னு நினைப்பேன்."

"சரி, இந்தப் படத்தைப் பார்!"