பூவை எஸ். ஆறுமுகம்
1
{
1
"ஐயையோ, என் அருமை மகள் எங்கே போனாளோ தெரியலையே. எப்பவும் போலத்தான் துரங்கிக்கிட்டிருந்துச்சு. என்னமோ லேசாச் சத்தம் கேட்டது. விழிச்சுக்கிட்ட நான், "யார் அது" என்று குரல் கொடுத்துப் பார்த்தேன். பதிலே வல்லை. மனசு சந்தேகப்பட்டது. விளக்கைத் துண்டிக் காஞ்சனை படுத்திருந்த இடத்தைப் பார்த்தேன். அந்த இடம் சும்மா காலியாயிருந்துச்சு என் உயிரே போயிடுச்சு எசமான்."
துயரம் சுருதி சேர்க்க விக்கலுடன் நடந்ததைச் சொன்னான் கண்ணுச்சாமி.
"காஞ்சானை இப்படித் திடுதிப்பென்னு மறைய என்னதான் காரணம்? பெண் இதயம் பேதலிக்கப் பிழைபட ஏதாகிலும் சொன்னாயா?
மனம் கற்பித்தக் காரணத்தை அடிப்படையாகக் கொண்டு ஒரு கேள்வியை உதிர்த்துவிட்டார் டாக்டர், கண்ணுச்சாமியிடம்
ஆனால் கேட்ட கேள்வி அவனைச் சுட்டுவிட்டதோ என்னவோ, பாவம்! பச்சைக் குழந்தைபோல அவன் விசித்து அழ ஆரம்பித்தான்.
"எசமான், அது பிறந்த நாளிலிருந்து முகம் கண்ட இதுவரை ஒரு வார்த்தைக் கூடச் சொன்னதில்லிங்க."
"ஒரு வேளை ரயிலடிப்பக்கம் போயிருக்கலாம்; ஏனென்றால், இன்னும் அரைமணி நேரத்தில் வடக்கே ஒரு ரயில் இருக்கிறது. எதற்கும் பதட்டப்படாமல் வா, போய்ப் பார்க்கலாம்."
எங்கும் மோனம்!
ரயிலடிக்குச் சென்றுகொண்டிருந்த அவர்கள் இருவரும் வழியில் குறுக்கிட்ட ஆற்றுப் பாலத்தை அணுகும்போது, இருளில் ஒரு புள்ளியென வெள்ளை உருவமொன்று முன்செல்வது புலனாயிற்று. மறுவினாடி, "தொபேலென்று பெருத்த ஒசை ஒலம் எழுப்பி அமைதியைக் கலைத்தது, அதே தருணத்தில் பாலத்தில் போய்க்கொண்டிருந்த உருவமும் மறைந்தது.
"என்ன அந்தச் சப்தம்?