பூவை எஸ். ஆறுமுகம்
5
}
பவளக்கொடி புத்துயிர் பெற்றாள்; மறுவாழ்வு பெற்றாள். கன்னக் கதுப்பெழிலில் நாணம் குமிழியிட்டு மின்னியது; கருவண்டுக் கண்களில் இன்ப வேதனையிருந்தது. அவள் மார்பகம் ஒரு கணம் விம்மித் தணிந்தது.
குமுதம் மலர்ந்தது; அங்கே தண்மதி மடலவிழ்ந்திருந்தான். வண்டு கானம் இழைத்தது; அங்கே மலர்மீது காட்சி தந்தது.
பவளக்கொடி புதுமை பெற்றாள். அங்கே நடேசன் முறுவலித்து நின்றிருந்தான்!
"என்ன, நடேசன் வந்துட்டானா? வந்து என் பவளக் கொடிக்குத் தாலியும் கட்டிப்புட்டானா? என்று கர்ஜித்தான் மாசிமலைத்தேவன்.
பண்ணையாள் கூறிய விவரம் தேவனின் ஆத்திரத்தைக் கிளறிவிட்டது. கூடப்பிறந்த அக்காளாக இருந்தும்கூடத் தனக்குப் பவளக்கொடியைத் திருமணம் முடித்து வைக்கவில்லையே என்று ஆத்திரப்பட்டான் கிழவியின்மேல். அக்குடும்பத்தை ஒழித்துவிட வேண்டுமென்ற ஒரே நோக்கமே தேவனின் மனதில் வைரம் பாய்ந்தது.
"என்ன அகங்காரம் நேற்றுப் பிறந்த பயல்; வக்கத்த அனாதைப் பயல் நடேசன் என் சொத்தைத் திருடிக்கிட்டானா? பார்க்கலாம், அவங்க ரெண்டுபேரும் எப்படி ஜோடியா இருக்காங்கண்ணு?"
அடுத்த நிமிஷம் தேவன் வெற்றிச் சிரிப்புச் சிரித்தான். மேற்கண்ட விஷ விதை அவனது வைர நெஞ்சில் சக்தியாகப் பரிணமித்தது.
மறுநாள் இரவு மூன்று நாழிகைப் பொழுது,
総。 m Wy
6TԱյ,
4& * {3 #T#Fị ĐĩT3ồT.
"சொல்றதைச் செம்மையாக் கேட்டுக்கணும். இன்னிக்குச் சாமத்துக்குக் கைவசமிருக்கும் சாராயப் புட்டிகள் அத்தனையையும் அப்படியே கொண்டுபோய் அந்த நடேசன் குடிசையிலே வச்சிரு. மற்றபடி இந்தத் துப்பு யாருக்கும் மூச்சுக் காட்டப்புடாது. உடனே ஒடிப்போய்ப் போலீஸ்காரங்கிட்டே விசயத்தை சொல்லிக் கையோடே அழைச்சிட்டு வந்திடு. கையும் மெய்யுமாப் பிடிபட்டப்புறம் பயல்