72
பூவையின் சிறுகதைகள்
அவன் மெய்ம்மறந்தான். 'ஆஹா என்று தனக்குத்தானே சொல்லிச் சிரித்தான். புதிய ரத்தம் பெற்றவனென அவன் திசை மடங்கு முனைந்தான். என்னவோ இடித்தது. டங் கென்று அரவம் கேட்டது. அரவம் கண்டாற் போன்று விழித்தான்.
நடை வண்டி நிலை குப்புறக் கிடந்தது.
"ராஜா. என் கண்ணே! என் தெய்வமே. உன்னைப் பெற்ற எங்களுக்கு இனி யானும் உயிர்ப் பிச்சை அளிக்க மனசு இறங்கப்படாதாடா?.ஐயோ!"
வீரமாகாளி சிரித்துக் கொண்டிருக்கிறாள்.
- 、 °、 s纷/ 、やメ ခဲဲ့ဒ္ဓိန္က မ္ဘိန္က ႏိုင္ငံ ႏိုင္ငံ
அறந்தாங்கி புதுக்கோட்டை பஸ், வீட்டைச் சுற்றி மடங்கியது.
எதை நினைப்பான்?
எதை மறுப்பான்? .
ஆனந்தனின் மேனி புல்லரித்தது. அந்தப் பதினோரு மாதங்களில் ராஜாவை அழைத்துக்கொண்டு இதே காரில் போய் குழந்தை
ஸ்பெஷலிஸ்ட் டாக்டர் விசுவிடம் எத்தனை தடவை காண்பித்து மருந்து வாங்கி வந்திருக்கிறார்கள்.
விதிக்கு மருந்து இல்லையாம்....
வினைக்கும் மருந்து இல்லையா?
"தெய்வமே, எங்க ராஜா எங்கே?"
மனம் அழுதது.
ராஜா எங்கே?
ஏமாற்றமும் ஏக்கமும் புடைசூழ, நெற்றி நரம்புகள் புடைத்து
நிற்க, நிலைக்காமல், நிற்காமல் அங்கும் இங்குமாகத் தேடினான் ஆனந்தன். சித்தபேதம் கொண்டவன் மாதிரி,
- »; ராஜா.
பாசம், கண்ணிராகப் பொங்கிப் புரள, கண்ணிர் பாசமாகப் பெருகி வழிய, வெறி கொண்ட பாவனையில் அலறினான் அவன்.