உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பூவையின் சிறுகதைகள்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 பூவையின் சிறுகதைகள்

தக்காளிக்காகத் தவம் இயற்றி, ஒற்றைக்காலால் நின்று கொண்டிருந்த செட்டியார் இன்னமும் நகரவில்லை.

அறந்தாங்கி நாகப் பட்டினம் எக்ஸ் பிரஸ் அந்த ஆவணத்தாங்கோட்டைச் சாலையை அசட்டை செய்துவிட முடியுமா என்ன?

கிழவர், மண்டையில் அடித்த உச்சி வெயிலைச் சட்டை செய்யாமல் இடது காதிடுக்கில் ஒளிந்திருந்த பாதி சுருட்டை வாய் ஊற எடுத்து, ஒரே தீக்குச்சியில் சமர்த்தாகப் பற்ற வைத்துப் புகையை இழுத்தார் புகையின் ரசிப்பில் வெகு சுவாரசியமாக ஈடுபட்டிருந்தார் மனிதர். ஏதோ சத்தம் கேட்டது. ஆடொன்று அவரது சோற்றுப் பானையை "லாவி க் கொண்டிருந்தது. "இந்த ஊரு நாட்டிலே பணக்காரங்க ஆடு அனந்தமா இருக்கே? அங்கிட்டாலே நாடிப் போவேன். இந்தக் கிழடு கதை ஒனக்குத் தெரியாது போலே. ஊருக்குப் புதுசோ?. நான் வடிக்கிறது ஒரு நாளைக்கு ஒரு கடுத்தம். இந்த லச்சணத்திலே நீயும் வந்துதான் தீரனும்னு அடம் பிடிச்சா, நில்லு, ஒனக்கும் டோடுறேன். அல்லாச் சோத்தையும் நான் தின்னுதான் என்ன கண்டேன்?... நாத்த ஒடம்பு மேலுந்தான் நாறித்தொலையுது” என்று ஒரு 'பாட்டம் பேசிவிட்டு, தலையில் சுற்றியிருந்த ஹைதர் காலத்துவாலையை நிமிண்டிச் சொறிந்து கொண்டார். ஈரும் பேனும் மண்டையைத் தாண்டிக் கொண்டு வந்திருக்குமோ? கிழவர் இருந்திருந்தாற் போலத் தனக்குள்ளாக ஒரு சிரிப்புச் சிரித்துக் கொண்டார். ஓர் இமைப்பிலே, அச்சிரிப்பு மறைந்துவிட்டது.

கிழவர். கிழவர் என்றால் அவருக்கும் பெயரென்று ஒன்று இருக்குமே?

இருக்கும். இருக்கும். ஆனால், அந்தப் பெயர் யாருக்குத் தெரியும்?

ஆலமரத்தடிக் கிழவர் என்றால், 'சுற்று வட்டை யில் ஏகப் பிரசித்தம் கறார்ப் பேர்வழி, எழுபத்திரண்டு வருஷம் தன் ஜீவனைக் காபந்து ச்ெய்து கொள்ளப் பழகிவிட்ட அசகாய சூரர் அல்லவா அவர்? மிஸ்டர் எமதர்மராஜனுக்கு 'டேக்கா கொடுக்கப் பழகிவிட்ட படுசமர்த்தராம் கிழவர் பேசிக்கொண்டார்கள் அந்த ரகசியமும் அவர் வரை ஒரு மர்மம்தான்! -

మడ డ ఎడ వడ వడ 淑 ?్య ※ אל אל