84 பூவையின் சிறுகதைகள்
இந்தாருங்காணும், இதுகளை எடுத்துக்கும்... நாளைக்கு இருந்தா, தூக்கி எறியத்தான் வேணும்" என்று சொல்லி குணம் கணித்து குற்றம் கண்டு ஒதுக்கிவிடத் துணிந்த காய்கறிகள் சிலவற்றை, பூவத்துக்குடி தேவருக்கு மனமுவந்து யாசகமாக நீட்டினார் அவர் கூழைக் கும்பிடு ஒன்று நியாயமான உண்மை போலக்கிடைத்தது.
ஆதாயம் என்றால், ஆதாயம் தானே?
பாவம், இவரா கருமி?....
என்ன உலகம்?
※ 涤 ※ ※
"ஆலமரத்தடிக் கிழவர் போயிட்டாருங்க" "ஆங்...!"
கும்பல், வித்தைக்காரனைச் சுற்றிக் கூடுவது மாதிரி சிறுகச் சிறுகக் கூடத் தலைப்பட்டது.
அதோ, வித்தைக்காரன்! என்ன உறக்கம்... என்ன உறக்கம்! "ராத்தரி நல்லாயிருந்தாரே, முத்துமலை அம்பலம்?"
"நல்லாத்தான் இருந்தார். போன கிழமையாச்சும் லேசா காயலா இருந்தாரு நேத்தைக்கு ராவு யாதொண்ணும் இல்லே. வரக் காப்பி குடுத்தான் பேராண்டி அப்பாலே, வளமைப்படி சாமான் சட்டுகளை உள்ளாற துக்கியாந்து சரி பார்த்து வச்சிட்டு, சுருக்குப் பையை எண்ணிக் காட்டி எங்கிட்டே ஒப்படைச்சிட்டு, இந்த வெளித் திண்ணையிலேதான் படுத்தாரு கோழி கூப்பிட, வேம்பாவைச் சூடு பண்ண ஏந்திருச்சேன். அவரு காலை மிதிச்சுப்பிட்டேன். திரும்பிப் பார்த்தேன். ஆளுமுண்டலை, முடங்கலை. சம்சயம் தட்டிச்சு. லாந்தரைப் புடிச்சு மூஞ்சியைப் பார்த்தேன். வெறும் கட்டைதான் மிச்சம்..." முத்துமலைக் கிழவர் கண்ணிரை வழித்துவிட்டார்.
"ஆமா, இங்கிட்டு வந்து வெகு தொலைக்குச் சொத்து சேர்த்து வச்சாராமே? அது சங்கதி ஒமக்குத் தீரத் தெரியணுமே? என்றார் தேவர் சன்னாசித்தேவர்.
"அந்தச் சங்கதியை அந்தக் கிழவரைக் கேட்டால் தான் தெரியுமுங்க.." குரல் நெகிழ்ந்து ஒலித்தது.