பக்கம்:பூ மணம்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43 பப்ளிக் செர்வீஸ் கமிஷன் பரீட்சையில் கலந்து கொள்ள அதற்கான பூர்வாங்க ஏற்பாடுகளில் ராஜேந்திரன் முனைந்திருந்தான். அரசாங்கப் பரீ ைகூடிகளில் ஏதாவதொன் ஹில் தேறினுல்தான் வாழ்க்கைக்கு நிலையானதொரு பிடிப்பு உண்டாகுமென்பது ஆனந்தனின் அனுபவம். அதன் பேரில் தம்பியையும் தூண்டினன். அப்போது பூங்குழலி தன்னைத் தேடிக் கட்டாயம் வரு வாள் என்று ராஜேந்திரன் எதிர்பார்த்தான். அதற்குப் பதில் அவள் புகைப்படங்கள் வந்து சேர்ந்தன. ஒருவேளை நேற்று பூமாவிற்கு முக்கியத்துவம் தந்து அவளுடன் போனதைப்பற்றித் தவருக எண்ணியிருப் பாளோ? அவசர காரியமென்ருல் முதலில் அதைத்தானே யாரும் கவனிப்பார்கள் ...? என்ற வாதம் அவன் மனதில் நீதி சொல்லியது. அதே சமயம் இந்த வாதமும் பிரதி வாதமும் ஏற்படக் காரணம் என்ன என்று நினைவோடிய போது அவனுக்கு ஏன் இத்தனை சஞ்சலம்? பூங்குழலி யார் ? நான் யார் ? என்ற புதுமாதிரியான ஞானமும் வெடித்தெழுந்தது. பூங்குழலியைப்பற்றிய நினைவு அத்துடன் ஒய்ந்தது. ஒய்ந்த இடத்தில் பூமாவைப்பற்றி எண்ணின்ை அவன். பூமா, ராஜேந்திரனின் சொந்த மாமன் மகள். முறை சொன்னல் அவள் அவனுக்கு முறைப்பெண். ஆனல் அந்த உறவு முறையெல்லாம் துண்டிக்கப்பட்டு ஆண்டுகள் பல துண்டு விழுந்து விட்டன. காரணம், பூமாவின் தந்தை முன்கோடக்காரர் ; ராஜேந்திரனின் தந்தையிடம் சிறு காரியமொன் ஜக்காகப் பெரிய விவகாரமே நடத்தி விட்டார். 'பூ' என்று உதறித்தள்ளும் அற்ப விஷயமென் குலும், கோர்ட்டுப் படியேறி விட்டால் அது மலேயாக வளர்ந்து விடுவது சகஜம்தானே : அதன் பலகுக ஒட்டிக் கிடந்த இரண்டு குடும்பங்களும் பிளவுபட்டன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மணம்.pdf/49&oldid=835568" இலிருந்து மீள்விக்கப்பட்டது