பக்கம்:பூ மரங்கள்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

麗器虹 வசந்தம் மலர்ந்தது கை ரெண்டையும் முதுகுக்குப் பின்ஞலே சேர்த்து வச்சுக் கட்டு என்று கத்திஞர் அவர். அப்படியே கட்டப்பட்டது. ராஸ்கல்...கல்யாணப் பந்தல்லே தீயாலே வைக்கிறே? எவ்வளவு திமிரு உனக்கு? என்று கர்ஜித்து சாட்டை விளா றைச் சுண்டி அடித்தார். அவன் 'அம்மா...அப்பா என்து அலறிஞன். தெருவிலே போன ஒன்றிருவர் நின்று விட்டார்கள். பக் கத்து வீடுகளிலிருந்து ஆண்களும் பெண்களும் வெளியே ஒடி வத்து வேடிக்கை பார்க்கக் குழுமினர். சிறு கூட்டம் கூடிவிட் டது அங்கே. பார்க்கிறவர்களுக்கு ஐயோ என்றிருந்தது. ஏன் இவர் இப்படி அடிக்கிரு.ர். அவன் சொத்தான பந்தல் சாமான அவனே தீயிட்டுக் கொளுத்துவான இவருக்கு இது என்ன கோட்டி!" என்று அங்கலாய்த்தார்கள் சிலர். என்னுஞலும் .அடிக்க வேண்டாம் அவனே' என்ருர்கள் பலர் .پناi.jئيډي கனீர்...சுளிர் என்று விளாசிஞர் அவர். இடது பக்க மும், வலது பக்கமும், கால் புறமும் உடல் மேலும் சாட்டை துவண்டு விளையாடியது. உடலைக் கவ்வியது. சொடுக்கி இழுத் தது. சுண்டிக் குதித்தது. கடித்து முத்தமிட்டது. அவன் அழுதான். கெஞ்சினன். அரற்றினுன் எசமான்...மன்னிக் கனும், சாமி, சாமி. உங்களுக்குப் புண்ணியம் உண்டு என்னைக் கொல்வாதீங்க... என்று கத்திஞன். கொஞ்ச நேரம் வேடிக்கைப் பார்த்து நின்ற சுந்தரம் 'அம்மா, அம்மா’ என்று கூவி உள்ளே ஒடிஞன், அம்மையும் வெளியே வந்தாள். அவள் இளகிய மனம் வேதனையுற்றது. "ஐயோ பாவம் அவனே ஏன் அப்படி அடிக்கீக? விட்டுருங்க அவனே...தொ.க்லஞ்சு போருன்?’ என்று கெஞ்சி ஒள், ஏய், நீ பேசாம உள்ளே போ' என்று ஒரு அதட்டல் போட்டார் அவர், அவள் ஒடுங்கிவிட்டாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மரங்கள்.pdf/135&oldid=835757" இலிருந்து மீள்விக்கப்பட்டது