பக்கம்:பெஞ்சமின் ஃபிராங்ளினின் நம்மைமேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

27

இந்த பணிகளை பிலடெல்பியா நகர சபை உடனடியாகச் செய்து பெஞ்சமின் வழியைப் பாராட்டியது. இந்த நடை பாதை சீரமைப்பால் எத்தனையோ வீடுகளில் தெருப்புழுதி மக்கள் நடமாடும்கால், சகதி, சேறு புகாமலிருக்கும் வசதி செய்து கொடுக்கப்பட்டது. மக்கள் பகுதியிலே இருந்த பணக்காரர்களும் ஏழைகளும் பெஞ்சமினின் நடைபாதை அமைப்பு முறையை வெகுவாகப் பாராட்டி மகிழ்ந்தார்கள். அவர்களால் ஆன உதவிகளையும் செய்தார்கள்.

யார் யார் வேலையில்லாமல் கஷ்டப்பட்டார்களோ, அவர்களுள் சிலரை ஒன்று சேர்த்து அவர்கள் தினந்தோறும் தெருக்களைக் கூட்டிச் சுத்தப்படுத்தினால் அவர்களுக்கு ஒரு நாளைக்கு ஆறு பென்ஸ் கூலி என்றும் பத்திரிகையில் எழுதி, அவர்களை வீதிகூட்டும் பணிக்கு அமர்த்தியதால் வீதிகள் எல்லாம் சுத்தமாகக் காட்சி தந்தன. இன்றைக்கு இதைத்தான் நகராட்சிகளும் மாநகராட்சிகளும் செய்கின்றன.

இந்த ஆறு பென்ஸ் கூலியை அந்தந்த வீதிகளிலே உள்ள வீடுகளிடம் இருந்து வசூல் செய்யப்பட்டு, தெரு கூட்டு வோருக்குரிய கூலியாக வழங்கப்படும் முறையை முதன்முதலில் கொண்டு வந்தார். இதற்கு முன்பு இப்படியொரு தெரு கூட்டும் சுகாதாரப் பணியே நடந்தது இல்லை. பெஞ்சமின் தான் இந்த திட்டத்தைப் புகுத்தனார். உலக நாடுகள் எல்லாம் இன்று இதைப் பின்பற்றி வருகின்றன.

தெருக்களைக் கூட்டி விட்டால் மட்டும் போதுமா, வீதியைக் கூட்டி சேர்க்கும் குப்பைக்கூள அசுத்தங்களை என்ன செய்வது என்று பெஞ்சமின் சிந்தித்தார்.

கூட்டிய குப்பைக் கூளங்களை தெருக் கூட்டிகள் ஆங்காங்கே குவியலாகக் குவித்து வைப்பார்கள். அந்த குப்பைக்