பக்கம்:பெஞ்சமின் ஃபிராங்ளினின் நம்மைமேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

29

பிலடெல்பியா நகர் வீதிகளில் ஏற்கனவே விளக்குகள் இருந்தன. அதைக் காலத்துக்கு ஏற்றவாறு மாற்றிச் சீரமைத்தவர் பெஞ்சமின் ஃபிராங்ளின்! எப்படி?

ஒரே உருண்டையான சுண்ணாடி. தெரு விளக்குதான் பெஞ்சமின் சீர்திருத்தத்துக்கு முன்பு இருந்தது. ஆனால், அந்த உருண்டை கண்ணாடி விளக்கு, நான்கு புறமும் நான்கு சிறிய கண்ணாடிப் பட்டைகளையுடைய புதியதொரு விளக்காக மாற்றி புதிய ஒரு அமைப்பைக் கண்டு பிடித்தவர் பெஞ்சமின்!

இந்த சதுர வடிவமான கண்ணாடி தெருவிளக்குகளை நாம் இப்போது காணமுடியா விட்டாலும், நமது நாட்டிலும் அந்த விளக்குகளை நகராட்சியினர் மின் விளக்கு அமைப்பு வருவதற்கு முன்பு பயன்படுத்தப்பட்ட விளக்குமாக இருந்ததை நாம் புரிந்து கொள்ள முடிகின்றது. ஏன் நமது நகரங்களிலேயே நூறாண்டு காலத்துக்கு முன்பு இருந்தது.

இந்த விளக்குத் திரியிலே இருந்து புகை வரும். விளக்கை அன்றாடம் சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும். அதே நேரத்தில் ஒளியை அதிகமாகவும் கொடுப்பனவாகவும் அந்த விளக்குகள் இருந்தன.

சதுர அமைப்புள்ள இந்த கண்ணாடி, விளக்குகளை அடிக்கடி நாமே சுலபமாகப் பழுது பார்த்துக் கொள்ளவும் முடியும். நான்கு பக்கச் சதுர கண்ணாடித் துண்டுகளில் ஏதாவது ஒன்று உடைந்து போனால் கூட, இதற்குப் பதிலாக வேறு ஒரு கண்ணாடித் துண்டை பதித்துக் கொள்ளும் வசதியை உடைய விளக்கு அது.

இன்றும் கூட நாம் பார்க்கிறோம். குடிசைப் பகுதிகள் தீ பிடித்துக் கொள்வதை. உடனே நாம் தீயணைப்புப் படைக்கு தொலைபேசி மூலம் தகவல் தருகின்றோம்.