பக்கம்:பெஞ்சமின் ஃபிராங்ளினின் நம்மைமேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

67

சொல்லும்போது ‘தொப்பிக்காரன்’ என்ற வார்த்தை தேவையில்லையே என்றார்.

உடனே ஜான் தாம்சன் அந்த விளம்பரப் பலகையிலே எழுதியிருந்த ‘தொப்பிக்காரன்’ என்ற வார்த்தையை அதிலிருந்து நீக்கிவிட்டார்.

குழுவில் மற்றொருவன் கருத்துக் கூறும்போது, ‘தொப்பிகள் விலைக்கு கிடைக்கும்போது, அதைத் ‘தயாரிப்பவன்’ யார் என்று எவனாவது கேட்டுக்கொண்டிருப்பானா? அதனால் தயாரிப்பது வார்த்தையை நீக்கிவிடலாமே!’ என்றார். ஜான்தாம்சன் அவர் கூறியதைப் போல, அந்த விளம்பர வாசகத்திலே இருந்த ‘தயாரிப்பவன்’ என்ற பதத்தை நீக்கிவிட்டார்.

வேறொருவன், ‘தாம்சன்தான் கடனுக்கு விற்பதில்லையே. எனவே ரொக்கப் பணத்திற்கு என்று எழுதியிருப்பது முட்டாள்தனம்’ என்றார். உடனே ஜான் தாம்சன் ‘ரொக்கப் பணத்திற்கு’ என்ற சொல்லையும் நீக்கி விட்டார்.

இப்போது அந்த விளம்பரத்தில் உள்ள சொற்கள், “ஜான் தாம்சன் தொப்பிகள் விற்பவன்” என்ற வாக்கியச் சொற்கள்தான்.

இன்னொரு நண்பர் பேசும்போது, ‘ஜான் தாம்சன் தொப்பிகளை இனாமாகவா கொடுக்கிறார்? இல்லையே! அவ்வாறானால் ‘விற்பவன்’ என்ற சொல் தேவையா விளம்பரத்தில்?’ என்றார்.

உடனே ஜான்தாம்சன் அந்த விளம்பரப் பலகையில் இருந்த விற்பவன் என்ற சொல்லைவும் நீக்கிவிட்டார்.

நீக்கிய வார்த்தைகள் எல்லாம் போக, இப்போது மீதமுள்ள விளம்பரச் சொற்கள் என்ன தெரியுமா? ‘ஜான் தாம்சன் தொப்பிகள்’ என்பவைதான்.