பக்கம்:பெண்களும் பேரழகு பெறலாம்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெண்களும் பேரழகு பெறலாம் 61 அது தான் இயற்கையின் ரகசியம் இறைவனின் அற்புதம், பால்கொடுப்பதால், பால் குடிப்பதால், தாய் சேய் இருவருக்குமே நல்லது. தாய் ப் பால் குடிக் கும் குழந்தை தெளிவாக, வளமாக வாழ்கிறது. புட் டிப் பால் குடிக் கும் குழந்தையை கொஞ்சம் மனக்கண் முன்னே நிறுத்திப் பாருங்கள. குழந்தையைத் தெம் போடு வாழவைக்கப் பால் கொடுக்கும் போதே, தாய்க்கும் சிறந் தொரு பயன் கிடைக்கிறது. தூய்மை நிறைந்த தாய் மையல்லவா! தாய்மைக்கு இறைவன் தரும் பரிசு. அப்படி குழந்தை பால் குடிக்கும் போது அதன் மூலமாகத் தாய்க்குக் கிடைக்கின்ற மன நிறைவினால், குழந்தையை 10 மாதங்கள் தாங்கியபோது விரிந்து பெரிதாக, உப்பிப் போன கருப்பையும், மற்ற உள்ளுறுப்புகளும் சுருங்கி, முன்னிருந்த பழைய நிலையை விரைவாக அடைகின்றன. பூரிப்படைந்த அவயங்களின் இயற்கை நெகிழ்வே அது. to குழந்தைகளுக்குப் பாலூட்டுகின்ற கிராமத்துத் தாய் மார்கள் கருப்பைக் கு எந்தவித இடமாற்றமோ கோளாறோ இல்லாமல் நிம்மதியாக வாழ்வதும், பட்டணத்துப் பெண்கள் தடுமாறுவதும் இதனால்தான். அதே நேரத்தில், அடி வயிற்றுத் தசைகளும், இடுப்பைச் சுற்றிப் படிந்துள்ள தசைப் பகுதிகளும், அவைகளின் தொடர்பாகப் பற்றியுள்ள தசைப் பகுதிகள் அனைத்தும் ஒரே சீராக, மாறாமல், மாறிய நிலையிலேயே இருந்து விடுகின்றன.