பக்கம்:பெண்களும் பேரழகு பெறலாம்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெண்களும் பேரழகு பெறலாம் 87 எனவே, கழுத்துக்கு என்று ஒரு சில பயிற்சிகளைத் தொடர்ந்து செய்து கொண்டே வருவோமானால் , பயிற்சி பெறுகின்ற கழுத்து, நாம் எதிர்பார்த்தவாறே அமைந்து விடும். இனி கூறப் போகின்ற பயிற்சிகளைத் தொடர்ந்து இரண்டு மாதங்களிலிருந்து நான்கு மாதங்கள் வரை பழகிக் கொண்டேயிருக்க வேண்டும். பயிற்சி 1 கால்களை இயல்பாக இருக்கும் படி வைத்து விறைப்பாக நிற்கு வேண்டும். முன்புறம் தலை வளைவது போல, முன் பக்கமாகக் கழுத்தை மட்டும் மடக்கி, தாடை (Chin) மார்பின் மேற்புறத்தில் படுவது போல குனிய வேண்டும். உடல் வளையக் கூடாது. இரு கைகளையும் கோர்த்துக் கொண்டு, தலைக்குப் பின் புறம் வைத்து இயல்பாக, அழுத்திப் பிடித்துக் கொள்ள வேண்டும். மூச்சை நன்றாக (ஆழ்ந்த சுவாசத்துடன்) உள்ளிழுத்துக் கொள்ளவும். பிறகு, தலையை மெதுவாக நிமிர்த்ததவும். கைகள் முன்புறம் தலையை அழுத்துவது போல் இருக்க, தலையை மெதுவாக நிமிர்த்துகின்ற முறையில் பயிற்சியைச் செய்து, பிறகு தலையை நிமிர்த்தி நிற்கவும். அதற்குப் பிறகுதான் மூச்சு விடவேண்டும். இந்தப் பயிற்சியை 20 முறை தொடர்ந்து செய்யவும்.