பக்கம்:பெண்ணில்லாத ஊரிலே.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

, , , ಅಭ೮೧/ಹೊಹಿಹಿ பணிந்தத

நான் நாற்பதாண்டு காலமாக அரசியலில் இருக்கிறேன். கட்சிப்பணி, எழுத்துப்பணி தவிர எனக்கு வேறு பணிகள் கிடையாது. வியாபாரத்திற்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. இருப்பினும் என்னைத் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் பிடிப்பதற்குக் காரணம் எதுவும் கிடைக்காமல்-மக்களுக்குப்போய்ச் சேர வேண்டிய அத்தி யாவசியப் பண்டங்களைக் கடத்தியதாகக் குற்றம் சாட்டி அந்தச் சட்டத்தின்படிதான் என்னைக் கைது செய்திருந் தார்கள். -

முதலில் எனக்கு அந்த உத்தரவை என்னிடம் காண் பிக்கவில்லை. இரண்டுவாரம் கழித்துத்தான் அந்த உத்தரவை நான் பார்த்தேன். வெளியில் வந்ததும் அர சாங்கத்திற்குக் கடுமையாக ஒரு கடிதம் எழுதினேன்.

அரசாங்கம் அந்த உத்தரவை ரத்து செய்து விட்டு, வேறு அரசியல் காரணங்களால்தான் நான் கைது செய்ய பட்டேன் என்று பிரகடனப்படுத்தாவிட்டால் என்னைக் கைது செய்ய உத்தரவிட்ட மாவட்ட ஆட்சித் தலைவர் மீது வழக்குப்போடுவேன்-என்று வழக்கறிஞர் மூலம் இராம தைபுர மாவட்ட ஆட்சித் தலைவருக்கு நோட்டிஸ்' கொடுத்தேன். எனது நோட்டீஸ் கிடைத்த ஒரு மாதத் திற்குள் அரசாங்கம் பணிந்து விட்டது.

தென்னரசு தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டது முற்றிலும் அரசியல் காரண்த்தின் அடிப்படையில்தானே தவிர அத்தியாவசியப் பொருள் களைக் கடத்தினர் என்ற சட்டத்தின்படி அல்ல' என்று எழுத்துமூலம் எனக்கு அறிவித்தது.

| 111 :