பக்கம்:பெண்ணில்லாத ஊரிலே.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழுதுங்களேன்!” என்று வற்புறுத்தினர். சரி என்று சொல்லி அவருக்கு இசைவு தெரிவித்தேன். அதன்படி அடிகளாருக்கும் கடிதம் எழுதினேன். -

7 - 11 .. 64

அடிகளாரிடமிருந்து பதில் வந்தது. விரைவில் இந்த மாதத் திலேயே ஒரு ஞாயிறன்று வருவதாக எழுதியிருந்தார். சிறை சூப்ரெண்டெண்ட் அவர்கட்கும் என் விருப்பத்தை சுட்டிக்காண் பித்து அடிகளார் கடிதம் எழுதியிருந்தார், இந்த எனது ஏற்பாடு சிறை அதிகாரிகளுக்கு ஒரு சிக்கலை ஏற்படுத்திவிட்டது. வாதப் பிரதி வாதங்களையும், கட்சிமாச்சரியத்தையும் என் முயற்சி ஏற் படுத்தி விட்டது. .

சைவ மதத்திற்கும் இந்து மதத்திற்கும் ஏழாம் பொருத்தம் என்பது நாடறிந்த உண்மை. இந்த 'பொருத்தம் சிறையில் வேலைசெய்யத் தொடங்கியது. சிறை நிர்வாகத்திலுள்ள பார்ப்பன நண்பர்களும், சங்கராச்சாரியார் மீது பற்றுக் கொண்ட பணக்காரக் குற்றவாளிகள்’’ சில பேரும் அடிகளார் வருகை குறித்து ஐயப்பாடு கொண்டு விட்டார்கள். "அடிகளார் நாத்திகராமே? தென்னரசு அழைத்ததும் வருபவர் தி.மு. க. வாகத்தானே இருப்பார். சிவமதம், இந்து மதத்திற்கு பரம விரோதியல்லவா? என்ற பிரச்சாரத் துணுக்குகள் சிறைக்குள் தூவிவிடப்பட்டன. - :

அதிகார பீடத்தில்-பொறுப்பு மிகப்பெற்றவர்கள் வேறு ஒரு கட்டத்திலிருந்து இந்தப் பிரச்னையை நோக்கினர்கள். ஒரு அரசியல் கைதியின் விருப்பப்படி நாம் ஒரு கூட்டத்தைச் சிறை யில் நடத்தில்ை பின்னல் சர்க்காருக்குப் பதில் சொல்ல நேரிடுமே!’ என்பதே அவர்களுக்குச் சிக்கல். -

14 - 11 - 64

சிறையில் மேல்மட்டத்திலிருந்து அடிகளாருக்குக் கடிதம் புறப்பட்டது. - - - "நீங்கள் எந்தத் കിൽ பேசப்போகிறீர்கள்? உங்களுக்கு பிற்பகல் 3-30 முதல் 4-30 வரை நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது', இதுதான் சிறை நிர்வாகம் அடிகளாருக்கு எழுதிய கடிதத்தின்

சாரம்,

கடிதத்திற்கு அடிகள்ார் பதிலும் எழுதிவிட்டார். நான் பேசப்போகும் தலைப்பு-வாழ்வுக் கலை 22-11-64ஆம் தேதி

31