பக்கம்:பெண்ணில்லாத ஊரிலே.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கேட்டீங்களா சேதியை' ஒலிபெருக்கி கெட்டுப்போய் விட்டதாம்!' என்ருர். -

"வேறு என்ன செய்வது?"

அதுதான் எனக்கும் ஒன்றும் புரியவில்லை. சங்கராச்சாரி யார் ஆட்கள் திட்டமிட்டுத்தான், இந்த வேலையைச் செய்து விட்டார்கள். நாங்கள் சிறைக்குள் இருக்கிருேம். எங்களுக்கு எந்த மதமாக இருந்தால் என்ன? பக்திதானே பிரதானம்' என்ருர் பொன்னுச்சாமித்தேவர்.

நீங்கள் உணர்ந்தால் சரி. இந்துமதம் ஒரு பெ ரி ய விலாங்கு. அது சிறிய மீன்களைக் கயளிகரம் செய்யத்தான் வந்தது' என்றேன். - -

அண்ணுச்சி நீங்கள் பொடிவைத்துப் பேசுவதில் சூரர். விஷயத்திற்கு வாருங்கள் ஒலிபெருக்கி வேண்டுமே?”

இருவரும் ஒரு ஏற்பாடு செய்தோம். வெளியிலுள்ள ஒரு நண்பரின் அன்பளிப்பாக உள்ளே ஒலிபெருக்கி ஏற்பாட்டை முடித்துக் கொண்டோம்.

மாலையில் வரவேற்பு ஏற்பாடு, மாலையின்றி நடைபெறக் காத்திருந்தது. அடிகளார் சரியாக 3-30-க்கு உள்ளே நுழைந் தார். பி. வகுப்பு கிரிமினல் கைதிகள் அனைவரும் சிறை உள் வாசலில் நின்று அவரை வரவேற்ருர்கள். - -

நான் உள்ளே கொஞ்சதூரம் தள்ளி நின்று வரவேற்று வணக்கம் கூறினேன். அவர் பொலிவுடன் காணப்பட்டார். உற்சாகமாக என்னிடம் பேச விரும்பினர். ஆனல் எனக்கு விதிக்கப்பட்டுள்ள நிபந்தனை அவருக்குத் தெரியாதல்லவா? நான் பட்டும் படாமலும் பேசினேன். -

நேராக ஒன்பதாம் பிளாக்கிலுள்ள அரங்கத்திற்குச் சென் ருேம். 1500 கைதி நண்பர்களும் அங்கே அமைதியாக அமர்த் திருந்தார்கள். - - - அடிகளார் பேசினர். எனது அருமை வேண்டு கோளுக்கிணங்க இங்கே வந்தேன்' என்று என் பெயரைக் குறிப்பிடாமல் சொல்லி விட்டுப் பேச்சைத் தொடங்கினர்.

தோழர் அருச்சுணத் தேவர் அவர்கள் வரவேற்புரை

நிகழ்த்தினர். அவர் ஒரு பக்திமான். முதுகுளத்தூர் கலவர வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றவர். கம்பீரமான உருவம்,

33