பக்கம்:பெண்ணில்லாத ஊரிலே.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யெல்லாம் மிரட்டியிருக்கிருர்கள். ரா ஜாங் கம் என்ன சிறு பிள்ளையா? அடிக்குப் பயந்து புதிதாக எதையாவது சொல்லு வதற்கு?

இராஜாங்கத்தோடு கைதான 200-க்கு மேற்பட்டவர்கள் போலீசாரால் கடுமையாகத் தாக்கப்பட்டிருந்தார்கள். வலை பின்னியதுபோல் முதுகெல்லாம் பிரம்படி. சதை கயிறு கயிருகப் பிய்ந்திருந்தது. ராஜாங்கத்தின் அண்ணன் பாண்டித் தேவரும் கூடலூர் ஊராட்சித் தலைவர் கருப்பணத் தேவரும்கூடத் தாக்கப்பட்டிருந்தார்கள். ஊராட்சித்தலைவர் ைக க ளி ல் அணிந் திருந்த ஆறு மோதிரங்கள் போலீசாரால் கையாடப்பட்டன. விலை உயர்ந்த கைக்கடிகாரம் ஒன்று, காது கேட்பதற்காக வைத்துக்கொள்ளும் இயந்திரம் ஒன்று, விலை மதிப்பு ஆறு நூறு ரூபாய் - எல்லாம் உடைத்துத் தவிடாக்கப்பட்டுவிட்டன, எல்லோர்ையும் போலிசார் லாரியில் ஏற்றும்போது "போங்கடா வரும்போது கையோட முட்டைப்பூச்சி மருந்தும் வாங்கிவாங்க, இங்கே வந்ததும் உங்க பெண்சாதி புள்ளைகளைப் பார்த்ததும் நீங்க தற்கொலை பண்ணிக்கவேண்டியதுதான்' என்று போலீசார் கொக்கரித்து அனுப்பியிருக்கிருர்கள். அதை நினைத்து நினைத்து ஒவ்வொருவரும் கண்ணிர் வடித்தார்கள். ராஜாங்கத்தை தினசரி பார்ப்பேன். காலை "பெட் காபி' அவருக்கு என் அறையில்தான் தயாராகும். முரசொலி', 'நம்நாடு' இதழ்களும் இங்கிருந்து நான்தான் அனுப்புவேன். அவர் வெளிக் கொட்டடியில் இருந்தார், நான் உள்ளே இருந்தேன்.

17-2-65

திடீரென்று கலைஞர் (எம் எல்.ஏ.) அவர்கள் சென்னையில் கைதானதாகக் கேள்விப்பட்டேன். முழு விவரம் தெரியவில்லை. வானெலியில் தெரிவித்தார்கள், திரு. கருணநிதி பாரதப் பாதுகாப்புச் சட்டப்படி கைதார்ை' என்று

இரண்டாண்டுகளுக்கு முன் சாத்துாரில் ந ை ட பெற் ,מי இளைஞர் காங்கிரஸ் மாநாட்டில் காமராசர் தெரிவித்தார்"நாட்டுப்பிரிவினைபற்றிப் பேசும் அண்ணுத்துரையையும் அவ. ரது தம்பிமார்களையும் ஷேக் அப்துல்லாவைப் போல் பிடித்துப் போட்டால் என்ன செய்வார்கள்?' என்று. அதை இப்போது, செயல்படுத்தத் தொடங்கியிருக்கிருர்களோ என்று நான் நினைத்தேன்.

கலைஞர் ஏன் கைதானுர்?" இதற்குப் பலர் பலவித: மாகச் சொன்னர்கள், - - -

52