பக்கம்:பெண்ணில்லாத ஊரிலே.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்றிரவு கலைஞர் அங்கு தூங்கினர். இல்லை. தூக்க மாத்திரை கொடுத்து துரங்கவைத்துவிட்டார்கள் டாக்டர்கள். இரண்டு பெரிய டாக்டர்கள் அன்று சிறையிலேயே தங்கி கலைஞரைக் கண்காணித்தார்கள். - 20 - 2 - 65

- காலை 4-30 மணிக்கு கலைஞர் எழுப்பப்பட்டிருக்கிருர்.

என்னய்யா இது! நீங்கதான் துரங்கச்சொல்லி தூக்க மாத்திரை கொடுத்தீர்கள்; இப்ப என்னைத் துரங்கவிடாமல் எழுப்புறீங்களே, என்று கடிந்தாராம் கலைஞர்.

டாக்டர்கள், நாங்கள் என்ன செய்வது. சர்க் கார் உத்தரவு காலை 8 மணிக்குள் நீங்கள் பாளையங்கோட்டைச் சிறைக்குப் போய்விடவேண்டுமாம்,' என்ருர்களாம்.

காலை 7 மணிக்கு ராஜாங்கம் அவரது அறைக்கு வந்த பிறகுதான்-கலைஞர்அவர்கள் நேற்று இரவு மதுரை வந்தது, தனது அறையில்தங்கியது, அதற்காகத்தான் தன்னை மருத்துவ மனைக்கு வஞ்சகமாக அழைத்துப் போனது - எல்லாமே அவருக்குத் தெரிய வந்திருக்கின்றன. - . 1-3 - 65 . - -

மதுரை முத்து அவர்கள் விடுதலையாகிவிட்டதாகப் பத்திரிகையில் செய்திபார்த்தேன். அவரை வழி அனுப்பி வைத்த நான் வரவேற்கவில்லையே என்ற கவலை எனக்கு. திரு. முத்து அவர்களோடு சென்றிருந்த பி. திருஞானசம்பந்தம் என்க்கு சகோதரர் முறை. இயக்கத்தால் நண்பர்களானுேம்; குடும்ப உறவால் சகோதரர்களாளுேம்.

திரு. முத்து அவர்களுக்கு 3-3-65ல் மதுரையில் வர வேற்பு என்று கேள்விப்பட்டேன். எனக்கு உற்சாகம் பிறந்தது. அவர் மதுரை வந்ததும் என்னைப் பார்ப்பாறென்ற உற்சாகம் தான் அது. நானும் அவ்ரும் பேச உட்கார்ந்தால் எங்கள் நாக்கில் அடிபடாத விஷயமே மிஞ்சாது. அரசியலும், சினிமா வும்தான் எங்களுக்குத்தீனி சிறை வாழ்க் கை யி ல் நான் இல்லாத குறைதான் அவருக்கு முத்து அவர்களைப் பற்றி நான் நன்கு உணர்ந்தவன். எதிரிகளுக்கு அவர் மலைப்பாம்பு; இயக்கத்தினருக்கு அவர் மலர்ச்செண்டு! • *

3 - 3 - 65 -

நான் எதிர்பார்த்தபடி திரு. முத்து அவர்கள் சிறைக்கு வந்தார். என்னையும், திரு. ராஜாங்கத்தையும் பார்த்தர்ர்.

56