பக்கம்:பெண்ணில்லாத ஊரிலே.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திராவிட முன்னேற்றக் கழகம் மேற்கொண்ட அனைத்து அறப்போராட்டங்களிலும் ஈடுபட்டுத் தவருமல் சிறைச் செல்லும் நிலைக்கு ஆளானவர் தென்னரசு அவர்கள். சிறைச் சாலையில் அவர் அ ைட ப ட் டி ரு ந் த காலமும் அதிகமே. பலமுறை சிறைப்பட்ட கழகத் தோழர் என்னும் தனிப்பெரு மையும் அவருக்குண்டு.

மத்திய அரசின் இந்திமொழி ஆதிக்கத்திட்டம் - தலைதூக் கும் போதெல்லாம் தி. மு. க. எதிர்ப்புக் குரல் கொடுத்துப் .ே பா ரா டி வந்துள்ளது. அப்படிப்பட்ட போராட்டங்களில் 1964ல் அறிஞர் அண்ணா தலைமையில் தொடங்கிய சட்டவரி கள் எரிப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்ற தென்னரசு அவர்கள், 1986ல் நிகழ்ந்த அதே வகைப் போராட் டத்திலும் பங்கேற்றுச் சிறை புகுந்தவர். பலமுறை சிறை சென்ற வகையால் சிறை வாழ்க்கைபற்றி, விவரிப்பதில் தனி யொரு பட்டறிவு அவரிடத்தில் காணலாம்.

1975-ல் ஜனநாயக நெறிமுறை-நெருக்கடி நிலை அறிவிப் பால் கழுத்து நெறிக்கப்பட்டது. மக்களின் உரிமைகள் - மூச்சுத் திணறி நைந்து கொண்டிருந்தன. அ ைதக் கண் டி த் து எதிர்ப்புத் தெரிவிப்பதைக் கலைஞர் ஒரு கடமையாகக் கருதிச் செயற்பட்டார். அதன் தொடர்ச்சியாகத் தமிழகத்தில் நடை பெற்று வந்த கழக ஆட்சி கவிழ்க்கப்பட்டது.கழக முன்னணித் தோழர்கள் பல் நூறு பேர் - மிசா கைதிகளாக - விசாரணைக்கு இடமின்றிச் சிறை வைக்கப்பட்டனர். கலைஞரின் மகனும் மருமகனும் சிறையில் தள்ளப்பட்டனர். சென்னை சிறைச் சாலையில் சித்திரவதையே நடத்தப்பட்டது. அந்த நாட்களில் மதுரைச் சிறையில் அடைக்கப்பட்டவர்களில் முக்கியமானவர் தென்னரசு. சிறை வாழ்விலேயே அது ஒரு தனி வகைக் கொடுமை அல்லவா? அவரது மனவுணர்வு கொந்தளித்த வகையையும் இந்த ஏடு விளக்குகிறது. . . ."

அறிஞர் அ ண் ணு அவர்களிடம் நெருங்கிப் பழகவும் அவரது அன்பையும் நம்பிக்கையையும் பெறவும் வாய்ப்புப் பெற்றவர் அவர், கலைஞரின் உற்ற நண்பராக - அவரது அன்பில் திளைப்பவராக, அவரது எண்ணத்தைச் செயற் படுத்தும் ஆ ற் ற ல் கொண்டவராக விளங்குபவர். எம் போலும் கழகத்தின் முன்னணியினரிட்மெல்லாம் அன்பு கொண்டு இனிது புழகுபவர். அதேபோல் சிறை ஷ்ாழ்வில் அவர் பழகியவர்களை எல்லாம் மறக்காமல், அவர்களுடன் கொண்ட உறவைக் குறிப்பிட்டுப் பேச்த் தவறவில்லை.