பக்கம்:பெண்ணில்லாத ஊரிலே.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்புத்தூர், முறையூர், சூரக்குடி, சத்ருசங்காரக்கோட்டை முதலிய ஊர்களில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு விட்டு; இறுதி நிகழ்ச்சியாக திருக்கோட்டி யூருக்கு வந்தார். இடையில் பெயர் சூட்டப்பெற்ற ஆண் குழந்தைகளுக்கெல்லாம் தென்னரசு என்று பெயர் வைத்தார்அண்ணு. -

இரவு பதிைேருமணிக்குக் கூட்டம் முடிந்தது. கலைஞர் அவர்கள் என். வி. நடராசன், மதுரை மாவட்டச் செயலாளர் முத்து, மூவரும் அண்ணுவோடு என் இல்லத்திற்கு வந்திருந் தார்கள். என் சொல்லுக்காக அனுப்பிவைத்த தென்னரசு உடைய பெற்ருேர்களிடத்தில், எந்தவிதமான கோளாறும் இல்லாமல் முன்னைவிட திடகாத்திரமாக தென்னரசுவை ஒப்படைக்கிறேன்’ என்று அண்ணு அவர்கள் எங்கள் ஊர் பொதுக்கூட்டத்தில் குறிப்பிட்டார்கள். -

இரவு பன்னிரெண்டு மணி அளவில் அண்ணு, கலைஞர் முதலானேர் விடைபெற்றுப் பிரிந்தார்கள். ஒராண்டு சிறை வாழ்க்கை எனது வாழ்க்கையில் ஒரு புதிய மறு மலர்ச்சியை உண்டாக்கியது. அ ண் ணு வி ன் உள்ளத்தில் என்னுடைய தொண்டு இடம் பெற்று விட்டதைத்தான் சிறை வாழ்க்கை எனக்கு அளித்த பதக்கமாகக் கருதினேன்.

1962ல் முதல் முறையாக மூன்று மாதம் தண்டிக்கப்பட்டு திருச்சி சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்தேன். 1963ல் பாதுகாப்புக் ைக தி யாக சிறைபிடிக்கப்பட்டு திருப்புத்துர் துணைச் சிறையில் வைக்கப்பட்டிருந்தேன். மூன்ரும் முறையாக இந்தச் சிறைவாசம் கிட்ைத்தது. சிறைவாசம் இத்துடன் முடிந்துவிடுமா என்பதை எந்த அரசியல் வாதியும் சொல்ல முடியாது.

74