பக்கம்:பெண்ணில்லாத ஊரிலே.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மார்ச் மாதம் முதல் வாரத்தில் 4-ம் பிளாக்கில் இருந்த சாத்துனர் பாலகிருஷ்ணன் திடீரென்று மாரடைப்பால் கால மாகிவிட்டார். யாரும் எதிர்பார்க்கவில்லை. தலைவருக்கு நெருக்க மாணவர் கொள்கையில் உறுதிப்பாடு கொண்டவர். தோழர் பாலகிருஷ்ணன்,

மறுநாள் பாலகிருஷ்ணன் சடலம் சாத்துருக்குக் கொண்டு போகப்பட்டது. விடியற்காலை பத்திரிகைச் செய்தியைப்படித்து நாங்கள் வியப்படைந்தோம் பாலகிருஷ்ணன் சவ ஊர்வலத்தில் தலைவர் க லே ஞ ர் கலந்துகொண்டதாகச் செய்தியைப் படித்தோம். தொண்டர்கள் நிமிர்ந்து உட்கார்ந்தார்கள்.

இரண்டு நாட்கள் கழித்து எனது குடும்பத்தினர் என்னைப் பார்க்க வந்தார்கள். . - st

கலைஞர் சாத்தூர் போய்விட்டுத் திரும்பும்போது எங்கள் வீட்டுக்கு வந்து சாப்பிட்டுவிட்டு ஓய்வு எடுத்துக் கொண்டார் என்றும், கலைஞருக்கு கோவை. மு. கண்ணப்பன் காரோட்டி யாக வந்தார் என்றும் கூறியதைக்கேட்டு எனக்கு விடுதலை வந்து விட்டதுபோன்ற உணர்ச்சி பிறந்தது.

நான்கு மாதங்களுக்குப் பிறகுதான் வெளிச் சிறைச்சாலை யிலிருந்து கடிதங்கள் வந்தன. கடிதங்கள் வந்தாலும் அதில் பொதுவான விஷயங்கள் தான் எழுதப்பட்டு இருந்தன. நாங்கள் கேள்விப்பட்டது எல்லாம் எந்தக் கடிதத்திலும் வரவில்லை. . . . . . . . . . . .

ஒரு நாள் சிறை அதிகாரிகள் சிலர் என்னையும், மற்றும். சில முக்கியஸ்தர்களையும் தமது அறைக்கு வரும்படி அழைத் திருந்தார்கள். ஏதோ முக்கியமான விஷயமாக இருக்கும் என்று. நாங்கள் ஆவலோடு சென்ருேம். அவர் க ள் சொன்னது எங்களுக்கு அதிர்ச்சியைத் தந்தது. .

சென்னைச் சிறைச்சாலையில் மு. க. ஸ்டாலின் கொடுமை யாகத்தாக்கப்பட்டதாகவும், ஆற்காடு வீராச்சாமிக்கு கொடுத்த அடிகளால் ஒரு காது.செவிடு ஆகிவிட்டதாகவும் திரு. ஆசைத் தம்பி உட்பட அனைவருக்கும் சரியான அடி என்றும் சிறை. அதிகாரிகள்.எங்களிடம் சொன்னர்கள். ஆளுல் நாங்கள் ஏற் கெனவே கேள்விப்பட்டதும் இந்தத் தக்வல்கள்தான். இப்போது, அது ஊர்ஜிதம் ஆகிவிட்டது. இந்தச் செய்தி எங்களுடைய பிளாக் முழுவதும் பரவி ஒவ்வொரு கட்டிடத்திலும் மோதி எதிரொலித்தது. மதுரைச் சிறைச்சாலையில் அதுவரை எந்த அசம்பாவிதமும் நடைபெறவில்லை. சிறை அதிகாரிகளுக்கும்.

80