பக்கம்:பெண்ணில்லாத ஊரிலே.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொய்வழக்குகள் எல்லாம் இந்திரா காந்திக்கு தெரிந்துதான் நடைபெறுகிறதா? அல்லது அவருக்குத் தெரியாமல் கவர்னரின் ஆலோசகர்கள் தன்னிச்சையாகச் செயல்படுகிருர்களா? இது பற்றி இந்திரா காந்தியின் கவனத்திற்குக் கொண்டு போக முடியுமா?" என்பதே தலைவர் கலைஞர் அவர்கள் கிருஷ்ணன் மூலம் ஷேக் அப்துல்லாவுக்கு அனுப்பிய செய்தி.

அதற்கு ஷேக் அப்துல்லா சொன்ன பதில் - தமிழ் நாட்டில் நடைபெறும் கெடுபிடிகள் அனைத்தும் இந்திரா காந்திக்குத் தெரியும். அவரது தூண்டுதலின் பெயரில்தான் நடைபெறுகிறது. கருணநிதி எதற்கும் பயப்படவேண்டய தில்லை. கொடுமைகள் நீண்டகாலத்திற்கு நிலைக்காது. நான் பனிரெண்டு ஆண்டுகள் சிறையில் இருக்கவில்லையா? இந்திரா காந்தி கெஞ்சில்ை மிஞ்சுவார்; மிஞ்சில்ை கெஞ்சுவார். கருணுநிதியைப் பொறுத்தவரை,தெற்கே ஒரு வேடிக் அப்துல்லா இருப்பதாகத்தான் நான் நினைத்திருக்கிறேன். இதுதான் எனதுபதில் இதுபற்றி இந்திரா காந்தியிடம் முறையிடத் தேவையில்லை என்று சொல்லியனுப்பினர். - -

(பிற்காலத்தில் அவர் சொன்னபடிதான் 5-5,55. தமிழ் நாட்டில் நடைபெற்ற அத்துமீறல்களுக்கெல்லாம் கடற் கரையில் இந்திரா காந்தி மன்னிப்புக் கேட்டார்)

கொஞ்சம் கொஞ்சமாக மிசாவின் கொடுமைகள் தணிய ஆரம்பித்தன. சிறையில் வசதிகள் கிடைத்தன! மின்சார விசிறிகள் வழங்கப்பட்டன. ரேடியேர வைத்துக் கொள்ளலாம் என்று அனுமதி கிடைத்தது. புலால் உணவு கிடைத்தது. ஆனல் இண்டர்வியூ விதிமுறை மட்டும் மாறவில்லை

ஒரு நாள் சிறை அதிகாரி என்னைத் தனியாக அழைத்தார் உங்களைப் பற்றியேதான் தினசரி சி. ஐ. டிக்கள் விசாரிக்கி றார்கள் என்றார். மற்றவர்கள் மன்னிப்பு எழுதிக் கொடுப்பதை நீங்கள் தடுப்பதாக சி. ஐ. டிக்கள் கருதுகிறார்கள்-என்றார். ஆனல் நான் பதில் ஏதும் சொல்லவில்லை; அமைதியாக இருந்தேன். இப்படியே அக்டோபர் வரை நாட்கள் ஓடின.

சிறையிலிருந்த நண்பர்க்ள் மாலையில் வளைபந்து (டென்னி காய்ட்) விளையாடுவது, வாலி பால் விளையாடுவது, காலை நேரத்தில் சடுகுடு ஆடுவது இதுபோல் தினசரி நேரத்தைக் கழித்தனர். ஆல்ை நான் மட்டும் ஒரு அறையில் ஒதுங்கியிருந்து நாவல்கள் எழுதினேன். - : , 3

82