பக்கம்:பெண்ணில்லாத ஊரிலே.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இதுஒரு அசாத்திய கற்பனைதான். இருந்தும் அப்படி எனக்கு ஒரு யோசனை தோன்றிற்று. என்ைேடு சிறையில் இருந்த வழக்கறிஞர் விஸ்வநாதய்யரை அ ைழ த் து வந்து என் சொத்துக்களை உயில் எழுதத் தீர்மானித்தேன் அவரும் ஒரு மணி நேரத்திற்குள்ளாக உயிலைத் தயாரித்துக் கொடுத்தார். முக்கியமான இரண்டு நண்பர்கள் அதில் சாட்சிக்கையெழுத்துப் போட்டார்கள். நானும் கையெழுத்து போட்டு என் மனைவியிடம் கொடுத்து அனுப்பி விட்டேன். ஒரு மணி நேரத்தில் மிகுந்த துயரத்தோடு அவர்கள் விடைபெற்றுக்கொண்டு போய்விட் டார்கள். நான் வேகமாகப் பெட்டி, படுக்கைகளைத் தயார் செய்து என்னுடைய நண்பர்களிடம் விடைபெற்றுக் கொண்டு பிளாக்கை விட்டு வெளியே வந்தேன். என்ளுேடு சிறை அதி காரிகளும், தி.மு. க. நண்பர்கள் அனைவரும் ஒன்று திரண்டு கலங்கிய கண்களோடு சிறை வ | ச ல் வரை வந்தார்கள். கழகத் தோழர்கள் அனைவரும் கண்ணிரைக் கொட்டினர். என்னலும் தாங்கமுடியவில்லை. எனக்கும் கண்கள் கலங்கின கடைசி முறையாகநண்பர்களைப் பார்ப்பதுபோல ஒரு உணர்வு

என்னை அழைத்துச் செல்வதற்கு ஒரு டி. எஸ். பியும் இரண்டு சப் - இன்ஸ்பெக்டர்களும், ஆறு கான்ஸ்டபிள்களும் வந்தார்கள். நான் அ :ப ர்களோடுபுறப்படுவதற்கு முன்பு என்க்கு விலங்கு மாட்ட வேண்டுமென்று சொன்னர்கள். மதுரை சிறை அதிகாரி அதற்கு உடன் படவில்லை. அவருக்கு விலங்கு அவசியம் இல்லை என்று சொன்னர். அடுத்து என் கையிலிருந்த மருந்துப் பெட்டியை அந்தப் போலீஸ் அதிகாரி தன் வசப் படுத்திக் கொள்ள முயற்சி செய்தார். நான் ஒரு வேளைக்கு ஐந்து மாத்திரைகள் சாப்பிட வேண்டும். அது என் வசமே இருக்கட்டும் என்று சொன்னேன். அதற்கு அதிகாரி மறுத்து விட்டார். நாங்க ள் உங்களை வேலூர் சிறைச்சாலைக்குக் கொண்டு சேர்க்கும் வரை நீங்கள் எந்த மாத்திரையும் சாப்பிட்க் கூடாது. நாங்கள் கொடுக்கும் உணவை மட்டும் தான் சாப்பிட வேண்டும் என்று அச்சுறுத்தினர். நான் அதற்கும் இணக்கம் தெரிவித்தேன்.

இரவு 7 மணிக்கு, மதுரை ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்து விட்டோம். ஸ்டேஷனில் போலீஸ் .ெ க டு பி டி அதிகமாக இருந்தது. எனக்கு என்று ஒரு தனி கம்பார்ட்மெண்ட்டை ஒதுக்கியிருந்தார்கள். சுதந்திரமாக உ ல | வி ய மதுரை ஜங்ஷனில் நான் ஒரு கைதியாக அன்றுதான் முதன் முதலாக அழைத்துச் செல்லப்பட்டேன். எனக்குத் தெரிந்த நண்பர்கள் எல்லாம் பயந்து, ஒதுங்கிக் கொண்டார்கள். அப்போது மாநில அளவில் ஒரு பெரிய போலிஸ் அதிகாரி மப்டியில் வந்து

84