பக்கம்:பெண்விலைக் கண்டனச் செய்யுட்கள்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இத்தகைய பெருங்குணஞ்சேர் எழின்மாதின்
       திருக்கணவன் இறும்பூ தோடு
நித்தியமும் வளர்செல்வப் பெருக்கத்தாற்
       குபேரனும்வெந் நிட்டே யோடக்
கத்துகடல் தனிற்பொன்னை யிட்டவெங்கள்
       சிங்கனெனுங் கனவான் வந்த
கத்துகுலந் தனில்வந்தும் நங்கையைவிற்
       றுயிர்வாழ்தல் நன்றோ? சொல்லீர்.(௨)


கரைபுரண்டு வந்தபெருங் காவிரியாற்
       றுப்பெருக்கைக் கலங்கா துள்ளம்
நிரைநிரைபஞ் சுப்பொதியை மேருவெனக்
       குவித்தடைத்து நேரின் றென்னத்
தரைபுகழச் சோழனுக்குத் தனிமகுடம்
       புனைந்ததன வணிகர் தங்கள்
மரபுதித்து மதியின்றி மங்கையைவிற்
       றுயிர்வாழ்தல் மாண்போ? சொல்லீர்.(௩)


கள்வளவன் பண்டைநாள் வண்கதவு
       வெள்ளிதனை வாங்க, அன்றே
என்மலியுஞ் செம்பொன்னால் இருங்கதவு
       தனைநாட்டி எவரும் போற்றச்
சொன்மலியத் திருமணத்திற் தூண்பவளத்
       தால்நாட்டும் தூய்மை வாய்ந்த
பொன்மலியுங் குலத்துதித்தும் பூவையைவிற்
       றுயிர்வாழ்தல் புகழோ? பேசீர்.(௪)