பக்கம்:பெண்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 பெண்

மகிழ்விக்கின்றன என்றல், அதனிலும் வேறு சிறப்பும் உண்டோ! - . . . .

பண்ணமரும் மென்மொழியார் பாலகரைப்

பாராட்டும் ஒசை கேட்டு . - விண்ணவர்கள் வியப்பெய்தி விமானத்தோடும்

இழியும் மிழலை யாமே. என்ற பாடலும் இது போன்ற தொன்றுதானே!

ஆம்! சங்க காலத்தே தலை தூக்கி நின்ற அந்தத் தமிழ் நாட்டுப் பெண் இனம், இடைக்காலத்தேதமிழ் நாட்டு வரலாறே இருட்டில் அடைபட்ட அந்த இடைக்காலத்தே- சற்றுத் தாழ்ந்த நிலையில் இருந்தது என்றுதான் கூறவேண்டும். என்ருலும், பின்பு ஏழாம் நூற்ருண்டின் தொடக்கத்தில் அவர்தம் க லே க ளு ம் வாழ்வும், வளமும் பிறவும் நலம் பெற்றன என்பதைக் காண்கின்ருேம். தமிழ் நாட்டுச் சமய நிலையும், அரசு நிலையும் மாறிய அந்தக்காலத்தே பெண்கள் கிலேயும் மாறி உயரலாயிற்று. அந்த நூற்ருண்டு தொடங்கி ஆண்ட பல்லவ மன்னர், மகளிர் ஏற்றத்தை மதித்து வந்ததாகவே வரலாறு வகுத்துரைக்கின்றது. அரசர் தம் மனைவியர், மகளிர் பேரால் பல அறச்செயல்கள் செய்ததையும் காண்கின்ருேம் நாம். எனவே, சங்க காலத்துக்கு அடுத்தடி பெண்கள் ஏ ற் ற ம் பெற்று வாழ்ந்த காலம் பல்லவர் காலம் என்பது தேற்றம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெண்.pdf/47&oldid=600897" இலிருந்து மீள்விக்கப்பட்டது