பக்கம்:பெண்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 பெண்

கழிந்திருக்க வேண்டும். அவர் யார்? சுந்தரரா? ஆம். அதோ நத்திப்போத்தரையன்-தமிழ் வெறி பிடித்து மாண்ட பெரும்பல்லவன்-காட்சி அளிக்கிருன். அந்தக் காலத்திலும் பெண்கள் கலை நலம் கொண்டவாகளாகத் தாமே காண்கின்ருர்கள் ! அவர்தம் ஆடலும் பாடலும் எவ்வாறு கோயில் தோறும் நடைபெறுகின்றன என் பதைக் காணும்போது எவ்வளவு மகிழ்ச்சி உண்டா கின்றது! ஆயினும், அந்த ஒரு குலம்-பதியிலார் குலம் என்று சேக்கிழார் சொன்னரே அந்தக் குலம்-நன்கு வளர்ந்து வந்ததாகவன்ருே தெரிகின்றது! புலவரது கற்பனையில் தோன்றிய அந்தப் பரத்தையர் குலம், இப்படியும் வாழ்விடை வந்து இன்னல் தரும் என்று யார்தான் கனவு கண்டிருப்பார்! ஆகா! எண்ணிப் பார்க்கவும் இயலவில்லையே! சேக்கிழார் சிறப்பு வாய்ந்த பரவையாரைப் பற்றிக் கூறும்போது ‘பதியிலாக் குலத்து வந்தார்’ எனக்குறிப்பிடுவது எவ்வளவு நடுக்கத்தை உண்டாக்குகின்றது! அந்தக் குலத்தில் பரவையார் ஏன் வந்து பிறக்கவேண்டும்? அது பழுதற்ற குலம் என்பதற் காகத்தானே? ஆடவர் கைப்பொம்மையாக இந்தப் பெண்கள் ஆட்டிவைக்கப்பட்ட நாட்கள் தமிழ் நாட்டில் எத்தனையோ கழிந்துள்ளன! ஏன்? இன்றுங்கூடப் பல பெண்கள் அப்படித்தானே வாழ்விக்கப்படுகிருர்கள்? வளமார் செல்வமும் பிற நலமும் பெற்ற பெருகிலேயில் பெண்கள் இருந்த போதிலும், அவர்களைப் பள்ளத் தாழ்த்திவைத்திருந்தார்கள் என்பது தெரிகின்றதே! அல்லாவிட்டால், இந்தப் பரத்தையர் குலம் வழி வழியாக வந்துகொண்டிருக்குமா?

அந்த நாளில் பெண்கள் கலைச் செல்விகளாய்த் திகழ்ந்தார்கள் என்பதைச் சுந்தரர் வாக்கே பல இடங்களில் மெய்ப்பிக்கின்றது. அக்காலத்தில் ஆடவரி லும் பெண்கள் ஆண்டவனிடத்தில் மாரு அன்பும் பத்தி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெண்.pdf/49&oldid=600899" இலிருந்து மீள்விக்கப்பட்டது