பக்கம்:பெண்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தரர் காலப் பெண்டிர் 53

மங்கையர் தம்மோடும், - பிணைந்து வாயிதழ்ப் பெருவெள்ளத் தழுந்திநான்

பித்தளுய்த் திரிவேன் ’ செப்பு நேர்முலை மடவரரியர் தங்கள் திறத்திடை

- நைவேன்.”

என்பன போன்ற அடிகளும் திருவாசகத்தில் இடம் பெற்றிருப்பதை அறியாதார் யார்? இறையருளுக்கே பெண் தன்மைதான் ஏற்றது என்று பதிகங்தோறும் பாராட்டிய மணி மொழியாரா இப்படிப் பெண்ணினத் தைப் பழித்துப் பேசுகிருர் ' என்றுகூட எண்ணத் தோன்றுகிறதல்லவா ? ஆம், இது ஒரு புரியாத புதிரே. அவரைத் துறவியர் என்று ஆராய்ச்சியாளர் கூறுகின்ற னர். அவரோ, பெண்களோடியைந்து பீடழிந்த வர லாற்றைப் பேசுகின்ருர். இரண்டில் எது சரி என்பதே ஆராய்ச்சிக்குரியதாய் உள்ளது. என்ருலும், அழுதடி அடைந்த அந்த மணிமொழியார்மேல் அத்தகைய குற்றம் சாட்டுதல் சற்றும் பொருந்தாத ஒன்ருகும். பின்பு ஏன் அவர் பெண் இனத்தை அப்படி இழிவுறுத்தியிருக்க வேண்டும்? தாமே பெண்ணுகும் தன்மை விழையும் மணி மொழியார் இப்படிப் பெண்களைச் சுழி என்றும் வலை என்றும், பித்தராக்குபவர் ' என்றும் பேசுகிருரே ! ஆம். இஃது ஒரு வேளே காலத்தின் கோலத்தால் நிகழ்ந்த செயல் போலும் ! அவர் காலத்தில் அவர் புத்தரொடு வாதிட்டதை அறிகிருேம்: அப்போது வாழ்ந்ததாகவும் அறிகின்ருேம். யசோதர சரிதையில் காணும் பேய்த் தன்மைப் பெண்டிர் சிலரை ஒரு வேளை மணிமொழியார் கண்டிருக்கவும் கூடும். அதுபற்றித்தான் இப்படிக் கூறினரோ என்ற ஐயப்பாட்டில் அவர் சொற்கள் மட்டு மின்றி. ஆராய்ச்சியும் நம்மைக் கொண்டு சேர்க்கின்றது. எப்படி இருந்தாலும், அவர் பெண்ணினத்தை அவ்வாறு பழித்தது தவறு என்றுதான் நான் கூறுவேன் ! ஒரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெண்.pdf/56&oldid=600906" இலிருந்து மீள்விக்கப்பட்டது