உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரியாரின் பண்பாட்டுப் புரட்சி.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கி.வீரமணி 21 அந்நாள் நிதியமைச்சரும் சீரிய பகுத்தறிவாளருமான நாவலர் இரா. நெடுஞ்செழியன் அவர்கள், அச்சிலையைத் திறந்து வைத்தார். தமிழக அரசு சார்பாக நடைபெற்ற அவ்விழாவிற்கு நான் தலைமை தாங்க அழைக்கப்பட்டு கலந்துகொண்டேன். இன்றும் தமிழக அரசின் செய்தி விளம்பரத்துறை அதனைக் கேரள அரசின் கூட்டு ஒத்துழைப்புடன் பாதுகாத்து வருகிறது. 70 ஆண்டுகளுக்குப் பிறகு அங்கேயே இரு மாநில அரசுகள் சார்பில் தந்தை பெரியாருக்கு நினைவுச் சின்னம் எழுப்பப்படுவது அவரது சமூகப் புரட்சிக்குக் கிடைத்த வெற்றி அல்லவா? 1974-75-இல் வைக்கம் சத்தியா கிரகத்தின் பொன் விழாக் கொண்டாட்டங்கள் அங்கு நடைபெற்றபோது, பிரதமர் திருமதி. இந்திராகாந்தி வைக்கத்தில் துவக்கி வைத்தார்; நிறைவு விழா நிகழ்ச்சிக்கு அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் அவர்களை அக்குழுவினர் அழைத்து பெருமைப்படுத்தினர். அவர்களோடு நானும் சென்று பங்கேற்று உரையாற்றினேன். கேரள மக்களும் தலைவர்களும் தந்தை பெரியார் அவர்களது தொண்டிற்கே முதல் பாராட்டுத் தெரிவித்தனர். வைக்கம் அதே வைக்கம் தொகுதியில் பிறந்த தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த திரு.கே.ஆர்.நாராயணன் அவர்கள் குடி அரசு தலைவராக, முதல் குடிமகனாக விளங்கினார் என்பது எவ்வளவு பெரிய சமுதாயப்புரட்சி !. அது பண்பாட்டுப் புரட்சி பெற்ற வெற்றியின் மணி மகுடம் போன்றது அல்லவா?