30 பெரியாரின் பண்பாட்டுப் புரட்சி திராவிடர் இயக்க ஆட்சிக்கு அதுவே பாதை வகுத்தது எனலாம். 1967 தேர்தலில் அறிஞர் அண்ணா அவர்கள் முற்றிலும் இன்ப அதிர்ச்சி அடையும் வண்ணம் முடிவுகள் அமைந்தன! அன்றுமுதல் இன்றுவரை அதாவது 35 ஆண்டுகளாக, திராவிடர் இயக்கங்களே மாறி மாறி, ஒன்று ஆளுங்கட்சி மற்றொன்று எதிர்க்கட்சி என்று ஆண்டு வரும் அரசியல் அதிசயத்தைத் தமிழ்நாட்டில் தோற்றுவித்தது! 1967-இல் அமைந்த திராவிட முன்னேற்றக் கழக (தி.மு.க.) ஆட்சியில், முதல் அமைச்சர் அண்ணா அவர்கள் தனது ஓராண்டுக் காலத்தில் முப்பெரும் சாதனைகளைச் செய்ததை எண்ணிப், பூரித்து மகிழ்ந்தார்! 1.சென்னை மாநிலம் என்பதற்குப் பதிலாகத் தாய்த் தமிழ் மண்ணிற்குத் 'தமிழ்நாடு' என்று பெயர் சூட்டியது. 2.தந்தை பெரியார் அவர்களால் புகுத்தப்பட்ட பண்பாட்டுப் புரட்சியாம் புரோகிதம், மற்றும் சடங்குகள் அற்ற பெண்ணுரிமையை அங்கீகரிக்கும் - வாழ்க்கைத் துணைநலமான சுயமரியாதைத் திருமணங்களுக்குச் சட்டவடிவம் கொடுத்தது! (சட்டமன்றத்தில் எதிர்ப்பே இன்றி அந்த சட்டத்திருத்தம் ஏகமனதாக நிறைவேறியது குறிப்பிடத்தக்கது.) 3.தமிழ், ஆங்கிலம், இந்தி என்ற மும்மொழித் திட்டத்திற்குப் பதிலாக இருமொழித் திட்டமே (தமிழ், ஆங்கிலம் மட்டுமே) என்ற ஆட்சி மொழிக் கொள்கைத் திட்டமும் ஒருமனதாக நிறைவேறிக் கடந்த 35 ஆண்டுகளாகக் தொடர்கின்றது. இதைப்பற்றிக் குறிப்பிட்ட முதல்வர் அண்ணா அவர்கள், பின்வரும் எந்தக் கட்சியும் இந்த முறையை மாற்றம் செய்யத் துணியமாட்டாது என்று உறுதியுடன் கூறினார்! இன்றுவரை அது நிலைத்த உண்மையாகிவிட்டது.
பக்கம்:பெரியாரின் பண்பாட்டுப் புரட்சி.pdf/37
Appearance