உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரியாரின் பண்பாட்டுப் புரட்சி.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 பெரியாரின் பண்பாட்டுப் புரட்சி மக்களுக்குக் கிட்டும் என்பதை என்னிடம் அடிக்கடிக் கூறுவார்: அதைப் பல பொது மேடைகளிலும் அவர் கூறியுள்ளார். அவர் என்னிடம் ஒருமுறை ஒரு சந்தேகம் கேட்டார். "தந்தை பெரியார் ஒருமிகப் பெரிய பகுத்தறிவாளர்; தனக்கு வேறு எந்தப் பற்றும் கிடையாது; அறிவுப்பற்று வளர்ச்சிப்பற்று, மனிதப்பற்றுதான் தனக்கு உண்டு என்று கூறிய மிகப் பெரிய புரட்சியாளரான அவர், இந்தியை வெறும் மொழிக்காக எப்படி எதிர்த்திருக்க முடியும்? அதற்கு வேறு ஆழமான காரணங்கள் இருக்கவேண்டுமே! அதை எனக்கு நீங்கள் தெளிவுபடுத்த வேண்டும்" என்று கேட்டார். சமஸ்கிருத . "தங்கள் கேள்வி நியாயமானதே. ஆரியப்பண்பாட்டுப் படையெடுப்புக்கு, மொழி-கலாச்சாரம் புகுத்தப்படுவதற்கு - ஒரு முன்னோடி முயற்சிதான் வட நாட்டு மொழியான இந்தியை தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் புகுத்த முனைந்தது. It was a disguised form of imposition of Sanskrit alien culture - process of Sanskritisation. இதற்கு ஆதாரம் : 1938-ல் இந்தியைக் கட்டாயமாகப் பள்ளியில் புகுத்துமுன், அன்றைய முதல் அமைச்சரான திரு.சி.இராஜகோபாலாச் சாரியார் அவர்கள், சென்னை லயோலா கல்லூரியில் பேசும்போது, 'தமிழ்நாட்டு மக்கள் சமஸ்கிருதம் படிப்பது அவசியம். ஆனால் அதைக் கூறினால் அதற்கு உடனே கடும் எதிர்ப்புக் கிளம்பும் என்பதால் முதல்கட்டமாக இந்தியைப் படியுங்கள் என்று கூறுகிறோம்' என குறிப்பிட்டதாகும். இந்தியைப் படிக்க ஆரம்பித்தால், பிறகு சமஸ்கிருதம் புகுவதற்கு, எந்த எதிர்ப்பும் இருக்காது என்பது அவர்களது தொலைநோக்குத் திட்டம்" என்பதைக் கூறினேன். அந்தப்படியான ஒரு முயற்சியில் அரசியல் சட்டத்தை உருவாக்கிய பெரும்பான்மையான வரைவுக்குழுவினர் (1) அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர் (2) கே.எம். முன்ஷி (3) டிடி. கிருஷ்ணமாச்சாரி (4) சர்.என். கோபால்சாமி அய்யங்கார் ஆகியோர் ஆவர். (இவர்கள் நீங்கலாக மற்ற இருவர்