உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரியாரின் பண்பாட்டுப் புரட்சி.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 பெரியாரின் பண்பாட்டுப் புரட்சி ஒன்று என்பதுபோல, தீபாவளியும், மற்ற மதப் பண்டிகைகளும் ஆகும். தனிப்பட்ட கதை, கற்பனைகளான செயற்கை அவை; பொங்கலோ உழைப்பைப் பெருமைப்படுத்தும் உன்னதத் திருவிழா! இயற்கையோடு இயைந்த இணையற்ற விழா! திராவிடனுக்கு, திராவிட சமுதாயத்திற்கு, திராவிடப் பண்பாட்டிற்கு, வரலாற்று நடப்புக்கு, அறிவு ஆராய்ச்சிப் பொருத்தத்திற்கு ஏற்றவாறு விழா அல்லது பண்டிகை என்பதாக வேறு எதையாவது கூற முடிகிறதா? என்று கேட்ட பெரியார் தமிழரின் பொங்கல்தான் விழாது காக்கும் விழா என்று அறிவுறுத்தினார்! ஆரியத்தின் பார்வையில் விவசாயம்! 'பெரியார் ஒரு அழிவு வேலைக்காரர், ஆக்கம் அவர் அறியாதது என்று குற்றம் சுமத்திய பல குட்டை மனிதர்களின் செவிள்களில் ஓங்கி அறைவது போன்றது - இந்தப் பொங்கல் திருநாள்!' ஆரியம் இதனை முழு மனதுடன் லட்சிய ரீதியாக ஏற்க முடியாது என்பது மனுதர்மத்தைப் படித்தால் விளங்கும். விவசாயம் என்பது பாவகாரியம்; மோசமான தொழில். "பிராமணன் ஏர் பிடிப்பது மகா மகா தோஷம். பிராமணன் ஏர் பிடித்தால் அது கொடுமை; நரகத்திற்கு அனுப்பி, அடுத்த ஜென்மத்தில் பன்றியாக பிறப்பான் என்ற அச்சுறுத்தல் தண்டனை!" இது இந்து சனாதன, வர்ணாஸ்ரம தர்மம்! 'உழுவார் உலகத்தார்க்கு அச்சாணி' என்பது தமிழர்தம் பண்பாடு! பின் எப்படி தீபாவளி முன்னே வந்தது? பொங்கல் பின்னே தள்ளப்பட்டது?