உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரியாரின் பண்பாட்டுப் புரட்சி.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 பெரியாரின் பண்பாட்டுப் புரட்சி சமுதாயம், சமயம் ஆகிய துறைகளிலும் தங்களது ஆதிக்கத்தையும், தமிழர்களுடைய இழிவையும், அடிமைத்தனத்தையும் பெருக்க முயற்சிக்கிறார்கள். இவை சுயமரியாதை உணர்ச்சியுள்ள தமிழர்களுக்குத் தோன்றி அவர்கள் ஒவ்வொரு துறையிலும் உள்புகுந்து தடவிப்பார்த்து உள் இரகசியங்களை வெளிப்படுத்தியதன் பயனாகவே கலை, இன, மொழி முதலிய இன்றையக் கிளர்ச்சிகள் தோன்ற வேண்டியதாயிற்று. இக்கிளர்ச்சிகளுக்குச் செல்வாக்கு ஏற்பட்டவுடன் கலைத்தொழில் வாழ்வுக்காரர்கள், பிரபுக்கள் முதலியவர்கள் இவற்றில் கவனம் செலுத்திப் பயனும், பொது நலத்தொண்டு புகழும் பெற் முயலவேண்டியவர் களானார்கள். இது மிக்க நியாயமும், பாராட்டத்தக்க காரியமும் ஆகும் என்பதில் எள்ளளவும் ஆட்சேபணை இல்லை. பண்டிதர்கள், இசைக் கலை ஆனால், இந்த முயற்சியினால் இம்மாதிரியான கிளர்ச்சி தோன்றவேண்டிய உட்கருத்து என்ன இருந்ததோ அதற்கு அனுகூலம் ஏற்பட வேண்டாமா என்றும், அனுகூலம் ஏற்படாவிட்டாலும், கேடாவது ஏற்படாமல் இருக்க வேண்டாமா என்றும் கேட்கிறோம். உதாரணமாக "இசை (சங்கீத)க் கலைக்கு மொழி முக்கியமானது. ஒலி இனிமை, தாள இனிமைதான் முக்கிமானது. மொழி இனிமை முக்கியமன்று" என்று இருக்குமேயானால் நமக்கு இந்த இசைக்கலை வளர்ச்சி முயற்சியில் இன்று கலந்து கொள்ளவேண்டிய அவசியமே இல்லை என்று சொல்லலாம். அப்படிக்கில்லாமல் இசையில் மொழி இனிமையே முக்கியமானது. அம்மொழி தமிழ் மொழியாய் இருக்கவேண்டும் என்று நாம் சொல்லுவதானால், அம்மொழிக்குப் பொருள் வேண்டாமா? · அப்பொருளுக்குப் பலன் வேண்டாமா? அப்பலன் நாம் செய்யும் கிளர்ச்சியின் குறிக்கோளுக்கு ஏற்றதாக நலந்தரத்தக்கதாக இருக்க வேண்டாமா? என்பதை யோசித்துப் பார்க்க வேண்டுவதாய் வாசகர்களை வேண்டுகிறோம்.