உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரியாரின் பண்பாட்டுப் புரட்சி.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 பெரியாரின் பண்பாட்டுப் புரட்சி "சர் சண்முகம் அவர்கள் ஒரு பெரிய பொருளாதார நிபுணர். இவ்விஷயத்தில் அரசர்களும் மதிக்கத் தகுந்தவர், எதிரிகளும் கண்டஞ்சத் தகுந்தவர்; வள்ளல் அண்ணாமலையார் பொருளாதார நிபுணத்துவத்தையே உருவாய்க் கொண்டவர். இவ்விருவரின் பொருளாதார நிபுணத்துவம் இந்தத் தமிழ் இசை மாநாட்டில், தமிழ் இசைக் கிளர்ச்சியில் எப்படிப் பயன்படுகிறது என்று பாருங்கள். செலவழித்த 'தமிழிசைக் கிளர்ச்சிக்காக இவர்கள் பொருளும், மற்ற தமிழ் மக்கள் செலழித்த பொருளும் தமிழ் நாட்டுப் பொருளல்லவா? தமிழர்களுடைய பொருளல்லவா? நிலை குலைந்த தரித்திரர்களாய், வயிற்றுப்பசிக்கு எச்சிக் கலையைத் தேடித்திரியும் ஈனமக்களாய்க் கருதப்படும் தமிழ் உயிர்களுடைய செல்வமல்லவா? இதற்குச் செலவழித்த உணர்ச்சியும், ஊக்கமும் ஆற்றலும் காலமும்கூட இவர்களுடையது அல்லவா, என்று கேட்பதற்கு மன்னிக்க வேண்டுகிறேன்."... 'ஆகவே, நாட்டினுடைய செல்வம், அறிவு, ஊக்கம், உணர்ச்சி இந்தப் பஜனைக்காகவா இப்படிச் செலவழிக்கப்பட வேண்டும்? இதைக்காணும் அயலான் எவனாவது இந்த நாட்டு மக்களுக்குத் தன்மான உணர்ச்சியோ, இழிவையும் கீழ்மையும் கண்டு உடல் துடிக்கும் சொரணையோ இருக்கிறது என்று கருத முடியுமா? நாட்டு மக்களுக்கு, இதில் பிரவேசித்து இந்தத் தன்மானத்துக்குக் கேடு செய்யும் தன்மையைப்பற்றிச் சிந்திக்கவோ, விளக்கவோ, தடுக்கவோ, உரிமை இல்லையா என்று கேட்கிறேன்." "தமிழிசைக் கிளர்ச்சிக்குச் செலவாகும் பணத்தையும், நேரத்தையும் ஊக்கத்தையும் பார்த்தால், அதன் பயன் இந்தப் பஜனையில் முடிவதானால், மானமும் அறிவும் எவனுக்குத்தான் வயிறு எரியாது என்று கேட்கிறேன்." உள்ள "நாடகம் எதற்கு? அது படிப்பிக்கும் படிப்பினை என்ன? அதற்காக ஏற்படும் செலவுகள் எவ்வளவு? புராணக் கதைகளை