உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரியாரின் பண்பாட்டுப் புரட்சி.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 பெரியாரின் பண்பாட்டுப் புரட்சி என்று கொதித்தெழுந்து, திருச்சி டவுன் ஆல் மைதானம் முன்பு பலலட்சம் மக்களைத்திரட்டி ஓர் கண்டனப் பொதுக்கூட்டம் போட்டு, எழுதிய ஏடு உட்பட அனைவர்பற்றியும் பேசினார். அதற்காகத்தான் கோர்ட் அவமதிப்பு வழக்கு! . அன்றைய தலைமை நீதிபதி ஜஸ்டீஸ் பி.வி.இராஜ மன்னார், ஜஸ்டீஸ் ஏ.ஏஸ்.பி. அய்யர் அய்.சி.எஸ்., ஆகியோர் இதனை விசாரித்துத் தந்தை பெரியார்மீதும், அன்னை ஈ.வெ.ரா. மணியம்மை மீதும் ('விடுதலை'யில் பேச்சை வெளியிட் டதற்காக) தண்டித்தனர் . அபராதம் கட்ட மறுத்தனர் அவர்களிருவரும். அப்போது நீதிமன்றத்தில் எதிர் வழக்காடாமல், தனது தொண்டுபற்றி ஒரு நீண்ட அறிக்கையினைத் தன்னிலை விளக்கமாகப் படித்தார் (23.4.1957). அதில் "இந்த நாட்டில் ஜாதி தர்மம் வர்ணசிரம அடிப்படையில் இருப்பதால், கீழ்ஜாதிக்காரர்களை மேலே வராமல் தடுப்பது மேல் ஜாதியினரின் தர்மமானபடியால் இப்படி நடக்கிறது! அதை எதிர்ப்பது எனது வாழ்நாள் தொண்டு - பணி அதற்காக நான் எந்த விலையும் தரத் தயார்! வாயில்-நாக்கில் குற்றம் இருந்தாலொழிய வேம்பு இனிக்காது, தேன் கசக்காது பிறவியில் மாறுதல் இருந்தால் ஒழிய புலி புல்லைத்தின்னாது-ஆடு மனிதனைக் கடிக்காது அது போலவாக்கும் நம் உயர்ஜாதி ஆதிக்கவாதிகளின் மனப்பான்மை" என்று கூறிவிட்டு, "புலி வேட்டைக்குப் போகும் போது புலி மேலே விழுந்து கடித்தால் ஒருவரிருவர் சாகவேண்டியது. தவிர வேறு வழியில்லை" என்று உருக்கமாகத் தெரிவித்தார். சுமார் 40 பக்கம்கொண்ட அறிக்கை அது. பண்பாட்டுப் படையெடுப்பின் விளைவுகள் மூலம் பாமரர்களை மட்டுமல்ல, படித்த